France Protest: பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்

France Protest: பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
News Image

France Protest: அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்கள் கட்டாயம் பதில் சொல்லி ஆக வேண்டும் என, ஃப்ரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் எச்சரித்துள்ளார்.

போராட்டத்தில் வெடித்த வன்முறை..!

ஃப்ரான்ஸ் நாட்டில் பரவலாக வெடித்த வன்முறையால் பொது சொத்துகளுக்கு சேதாரம், கொள்ளையடிப்பு மற்றும் போலீசாருடன் மோதல் போன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறி உள்ளன. விலைவாசி உயவு, மோசமான நிலையில் உள்ள பள்ளிகள் ஆகியவற்றை கண்டித்து நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. இதில் வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதோடு, அரசு அலுவலகங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.  மக்களின் கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதேநேரம் வன்முறையாளர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இமானுவேல் மேக்ரான் எச்சரித்துள்ளார்.

போர்க்களமாக காட்சியளித்த பாரிஸ் நகரம்:

தலைநகர் பாரிஸில் அமைதியற்ற களவரமான சூழல் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பிளேஸ் டி லா ரிபப்ளிக் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில், சிதைந்த கடை முன் பகுதிகளுடன், உடைந்த கண்ணாடிகள் மற்றும் வீசப்பட்ட  கூழாங்கற்கள் ஆகியவை தரை முழுவதும் சிதறிக் கிடந்தன. சமூக ஊடகத் தளங்களில் வெளியான வீடியோக்களில், வணிக மற்றும் சுற்றுலாப் பகுதிகளிலும் சேதங்களும் கொள்ளையும் நடந்ததைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எரிந்த கட்டிடங்கள், அடித்து உடைக்கப்பட்ட கடைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்த சிலர், ஃப்ரான்ஸ் வீழ்ந்தது எனவும் குறிப்பிட்டனர்.

French police clashed with protesters and rioters across France on Saturday as around 550,000 people joined nationwide protests, including 110,000 in Paris. https://t.co/yqCumaHBBp
— Clash Report (@clashreport) October 17, 2026

🚨 Protests in Paris escalate as luxury boutiques, including CELINE, Dior, Burberry and Louis Vuitton, are reportedly damaged and looted. What began as student-led demonstrations over school conditions has reportedly grown into wider anti-government protests, reflecting broader social and economic grievances across France. 🎥 @zakariaabdelkafi | @laveulliure | @ctrlibre
— ☻ (@NoExtraFeelings) October 18, 2026

BREAKING: Milan, Italy right now, chaos caused by protesters. https://t.co/icNtvcWd8C
— Globe Eye News (@GlobeEyeNews) October 18, 2026

வன்முறையாளர்களுக்கு எச்சரிக்கை

வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் இமானுவேல் மேக்ரான், “ பொதுமக்களின் கோபத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அமைதியான முறையில் போராடுபவர்களுக்கும் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. தீவிர இடதுசாரிக் குழுக்களைச் சேர்ந்த கிளர்ச்சி குழுவினர்களும், ஏராளமான குற்றவாளிகளும் இணைந்து நிகழ்த்தும் கட்டுப்பாடற்ற வன்முறை இது.. கொள்ளையடித்தவர்கள் சேதங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும், ஃப்ரான்ஸை வீழ்த்த முயன்றவர்கள் பொறுப்பு ஏற்க வைக்கப்படுவார்கள்" என எச்சரித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks