Egmore-Tiruchy: இனி சென்னை டூ திருச்சி 130KM ஸ்பீடில் பறக்கலாம்..! 336KM-க்கு அப்க்ரேடாகும் ட்ராக் - ட்ராஃபிக் ஓவர்

Egmore-Tiruchy: இனி சென்னை டூ திருச்சி 130KM ஸ்பீடில் பறக்கலாம்..! 336KM-க்கு அப்க்ரேடாகும் ட்ராக் - ட்ராஃபிக் ஓவர்
News Image

Egmore Trichy Railway Track: வழித்தட மேம்பாட்டின் மூலம் எழும்பூரிலிருந்து திருச்சிக்கு இனி மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது.

எழும்பூர் - திருச்சி ரயில் வழித்தடம்:

சென்னை எழும்பூரிலிருந்து திருச்சி வரையிலான இரட்டை வழித்தடத்தை மேம்படுத்தும் பொறியியல் சார்ந்த பணிகளை தெற்கு ரயில்வே முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் தற்போதுள்ள மணிக்கு 110 கிலோ மீட்டர் என்ற அதிகபட்ச வேகத்தை 130 கிலோ மீட்டராக உயர்த்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இந்த பணியானது திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இருநகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை வழக்கமான ரயில்களுக்கு 20 நிமிடம் வரையிலும், வந்தே பாரத் உள்ளிட்ட குறைவான நிறுத்துமிடம் கொண்ட ப்ரீமியம் ரயில்களுக்கு 30 நிமிடம் வரையிலும் குறைக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வழித்தட அப்க்ரேட்கள் என்ன?

336.56 கிலோ மீட்டர் நீளத்திற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளானது திருப்பங்கள், வழித்தடங்கள் இணையும் மற்றும் பிரியும் இடங்களில் ரயிலின் வேகத்தை அதிகரிப்பது, வளைவுகளில் உள்ள சாய்வுக் குறைபாடுகளை நீக்குதல், தண்டவாளச் சந்திப்புகளில் விரைவான இயக்கத்தை எளிதாக்க, வழக்கமான இணைப்புப் புள்ளிகளுக்குப் பதிலாகத் தடிமனான வலை இணைப்புப் புள்ளிகளை அமைத்தல்;, கால்நடைகள் இருப்பு பாதைக்குள் அத்துமீறுவதை தடுக்கத் தண்டவாளங்களுக்கு வேலி அமைத்தல்,  ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட சமிக்ஞை அமைப்புகளை வழங்குதல் மற்றும் கடந்து செல்ல வழக்கமான ரோட் க்ராசிங்கிற்குப் பதிலாக சாலை மேம்பாலங்களை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தற்போதுள்ள 52 கிலோ எடை கொண்ட தண்டவாளங்கள் முற்றிலுமாக 60 கிலோ எடை கொண்ட தண்டவாளங்களாக மாற்றப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்

336.56 KM - 80% பணிகள் நிறைவு

மொத்தமுள்ள 336.56 கிலோ மீட்டர் நீள வழித்தடத்தில் சென்னை எழும்பூர் தொடங்கி விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் வரையிலான 162 கிலோ மீட்டர் நீளத்திற்கான பணிகள் 80 சதவிகிதம் வரை நிறைவடைந்துள்ளன. வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த பணிகள் முழுமயாக பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள 174.57 கிலோ மீட்டர் நீளத்திற்கான விழுப்புரம் தொடங்கி திருச்சி வரையிலான வழித்தட பணிகள் தற்போது தான் தொடங்கி இருப்பதாகவும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேம்பாட்டு பணியில் உள்ள சவால்கள்:

இறுக்கமான மண் இல்லாத பககுதிகளில் கரைகளை வலுப்படுத்தும் வகையில் செங்கல்பட்டு தொடங்கி விழுப்புரம் வரையிலான வழித்தடம் பொறியியல் ரீதியாக மிகவும் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது. தளர்வான மண் காரணமாக, சுமார் எட்டு கிலோமீட்டர் நீளமுள்ள குறைந்தது ஆறு இடங்களில் கரைகளை வலுப்படுத்துவதில் சவால்கள் நிலவியதாம். கருங்குழி, ஓதிவாக்கம் மற்றும் ஓலக்கூர் ஆகிய பகுதிகளில் இந்த சவால்கள் நிலவினாலும், பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன மழைக்காலங்களில் மண் அடிக்கடி அடித்துச் செல்லப்படுவதால், இப்பணி மேலும் சவாலாக நிலவுகிறது.

சென்னையில் வேகமெடுத்த பணிகள்:

சென்னை எழும்பூர் தொடங்கி விழுப்புரம் வரையிலான வழித்தடத்தில் 195 தண்டவாள சந்திப்புகள் உள்ளன. இதில் ரயில்கள் வேகமாகச் செல்வதற்கு வசதியாக, வழக்கமான ஸ்விட்சுகளுக்குப் பதிலாக தடிமனான வலை ஸ்விட்சுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு தொடங்கி விழுப்புரம் இடையேயான பெரும்பாலான பொறியியல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், செங்கல்பட்டு தொடங்கி சென்னை எழும்பூர் வழித்தடத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.  162 கி.மீ நீளமுள்ள சென்னை-விழுப்புரம் பிரிவில் சுமார் 50 கி.மீ பகுதிக்கு ஏற்கனவே வேலி அமைக்கப்பட்டுள்ள நிலையில், மணிக்கு 130 கி.மீ வேகத்தில் வாகனங்கள் செல்வதற்கு வசதியாக, மீதமுள்ள 112 கி.மீ நீளமுள்ள தண்டவாளப் பகுதிக்கான பணிகள் முடிக்கப்பட வேண்டி உள்ளது.

மணிக்கு 130KM வேகம்:

இந்தப் பிரிவில் 41 லெவல் கிராசிங் (LC) வாயில்கள் உள்ளன. இவற்றில், சாலை மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் கிடைத்தவுடன் மூன்று மூடப்பட உள்ளன. மீதமுள்ள லெவல் கிராசிங்குகள், ரயில்வே வழிகாட்டுதல்களுக்கு இணங்க, சாலை மேம்பாலங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பயன்பாட்டு சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்புகள் மூலம் சரிசெய்யப்பட உள்ளன. அனைத்து மேம்பாட்டு பணிகளும் முடிந்த பிறகு, , மணிக்கு 143 கி.மீ. வரையிலான வேகத்தில் சோதனை ஓட்டங்களை நடத்தப்படும். அதன்பிறகு பயணிகளுடன் கூடிய ரயிலை மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்குவதற்கான ஒப்புதலுக்காக ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம்(CRS) விண்ணப்பிக்கப்படும். அந்த ஒப்புதலுக்குப் பிறகு இந்த வழித்தடம் புதிய வசதிகளுடன் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks