Edappadi Palaniswami: நான் என்ன ரீல்ஸ் எடுக்குற ஆளா? .. ஏமாற்று அரசியலில் விருப்பமில்ல.. விஜயை அட்டாக் செய்த இபிஎஸ்!

Edappadi Palaniswami: நான் என்ன ரீல்ஸ் எடுக்குற ஆளா? .. ஏமாற்று அரசியலில் விருப்பமில்ல.. விஜயை அட்டாக் செய்த இபிஎஸ்!
News Image

ஏமாற்று அரசியலில் எனக்கு ஒருநாளும் உடன்பாடு இல்லை என முதலமைச்சர் விஜயை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகவே தாக்கி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயிலின் அடுத்தக் கட்டமாக பூந்தமல்லியில் இருந்து வடபழனி வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 11 ரயில் நிலையங்களை உள்ளடக்கிய இந்த ரயில் சேவையை இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து நரேந்திர மோடியும், விஜயும் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர். இதன்பின்னர் இருவரும் சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதனிடையே இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் உரிமை கொண்டாடி சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏமாற்று அரசியலில் உடன்பாடில்லை

அதில், “இன்றைய தினம், தமிழகத்திற்கு வருகை புரிந்து, சென்னை மெட்ரோவின் பேஸ் 2 திட்டத்தின் வடபழனி-பூந்தமல்லி வழித்தடத்தை துவக்கி வைத்துள்ள  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சென்னை விமான நிலையத்தில் மகிழ்ச்சியோடு வரவேற்றேன்.

இந்த திட்டத்தை பொறுத்தவரை, எனது தலைமையிலான அதிமுக  அரசு இருந்த போது, இதற்கான DPR தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் அனுமதி பெற்று, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மத்திய அரசின் நிதி வராத சூழலிலும், மாநில அரசின் நிதியை ஒதுக்கீடு செய்து, பணிகளை துவக்கிய அரசு அஇஅதிமுக அரசு.

மேலும், பிரதமர் அவர்களை பலமுறை நான் நேரில் சந்தித்து இதற்கான நிதி குறித்து கோரிய நிலையில், மத்திய அரசும் நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ரூ.63,246 கோடி ஒதுக்க 2024-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் இன்றைய தினம், வடபழனி - பூந்தமல்லி வழித்தடம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட ஆட்சியில் நாம் விதைத்த விதைகள் தற்போது வரை விருட்சமாவதைக் காண மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த பழனிசாமி நினைத்திருந்தால் மெட்ரோ பாலத்தின் மீது கூலிங் கிளாஸ் போட்டு ஒரு போட்டோஷூட், சுரங்கப்பாதை அடியில் பாதுகாப்பு ஹெல்மெட் போட்டு ஒரு ரீல்ஸ் ஷூட்டிங் எடுத்திருக்க முடியும். ஆனால், அப்படிப்பட்ட ஏமாற்று அரசியலில் எனக்கு ஒருநாளும் உடன்பாடு இல்லை.“நாம் பேசக் கூடாது. நம்முடைய செயல்கள் பேச வேண்டும்” என்பதை எப்போதும் நம்புபவன் நான். யாருடைய ஆட்சி இருந்தாலும், நம்முடைய செயல்கள் தான் தமிழக மக்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது என்ற பெருமிதத்தை நமது திட்டங்கள் இன்றுவரை நமக்கு தந்துக்கொண்டு இருக்கின்றன.

இந்த இனிய தருணத்தில், தலைநகர் சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மெச்சத்தக்க பங்காற்றிவரும் சென்னை மெட்ரோவின் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks