Driving License: ட்ரைவிங் லைசென்ஸில் வரப்போகும் அதிரடி மாற்றம்..! உயரும் பாஸ் மார்க், ஆனால் கஷ்டங்கள் குறையும்?

Driving License: ட்ரைவிங் லைசென்ஸில் வரப்போகும் அதிரடி மாற்றம்..! உயரும் பாஸ் மார்க், ஆனால் கஷ்டங்கள் குறையும்?
News Image

Driving License Update:  வாகனர் ஓட்டுனர் உரிம அட்டையில் மேற்கொள்ள பரிசீலிக்கப்பட்டு வரும் மாற்றங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஓட்டுனர் உரிமத்தில் அதிரடி மாற்றங்கள்:

ஓட்டுனர் உரிமத்தை பெறுவதற்கான நடைமுறை மட்டுமின்றி, அடையாள அட்டைகளில் எளிதில் வேறுபாடுகளை காண்பதற்கான மேம்பாடுகளையும் வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறதாம். அதன்படி, ஓட்டுனர் உரிமை அட்டைகளில் பயனர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற குடியுரிமையை குறிப்பிடுவது, வயது மற்றும் முகவரிக்கான சான்றாக நிர்வாக நீதிபதி அல்லது நோட்டரி முன்னிலையில் எடுக்கப்படும் பிரமாணப் பத்திர சமர்ப்பிப்புகளை ரத்து செய்வத்து குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். இந்த பிரமாண பத்திரங்கள் தவறான வழியில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், இந்த முடிவு முன்னெடுக்கப்பட்டுள்ளதாம்.

பாஸ் மார்க்கை உயர்த்த முடிவு..!

ஆயுள் காப்பீடு திட்டங்களும் இனி சான்றாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன விதிகளின் கீழ் ஓட்டுநர் உரிமம்  வழங்கும் முறையில் பெரும் மாற்றங்களைப் பரிந்துரைத்து. இணையவழி பாதுகாப்பான ஓட்டுநர் பயிற்சி மதிப்பீட்டிற்கான தேர்ச்சி மதிப்பெண்ணை தற்போதைய 60 சதவிகிதத்திலிருந்து 75 சதவிகிதம் ஆக உயர்த்துவதற்கான வரைவு அறிவிப்பை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் ஓட்டுனர் உரிமை அட்டையில் பயனரின் ரத்த வகை, தொலைபேசி எண் மற்றும் அவசரத் தொடர்பு விவரங்கள் இடம்பெறுவதைக் கட்டாயமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இணையவழி ஆதார் சரிபார்ப்பு மூலம் முகவரி, பெயர் மற்றும் தொடர்பு எண் மாற்றங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட ஓட்டுநர் உரிமச் சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டால், அதற்கான கட்டணங்களைத் தள்ளுபடி செய்யவும் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

பிரமாண பத்திர நடைமுறை:

தற்போதைய சூழலில் ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க தேவையானதாக 12 ஆவணங்களில் எதையும் சமர்பிக்க முடியாவிட்டால், பயனர் நிர்வாக நீதிபதி, நீதித்துறை நீதிபதி அல்லது நோட்டரி பப்ளிக் முன்னிலையில் உறுதி செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை சமர்பிக்கலாம். அதனை ஏற்று வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இது வயது மற்றும் வசிப்பிட முகவரிக்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் சமூக விரோதிகள் போலியான முகவரிகளையும் பிறந்த தேதிகளையும் பதிவு செய்ய பிரமாணப் பத்திரங்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அதற்கான மாற்று ஆவணங்களை பரிசீலிக்கலாம் என முன்மொழியப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: NTK Karthiga: ”சவால் விட்டீங்களே..” சிறைவாசலில் செய்தியாளர் கேள்வி - டென்ஷனான நாதக வேட்பாளர் கார்த்திகா

புதிய சான்று ஆவணங்கள்:

அதன்படி முகவரிச் சான்றிற்காக ஆதார் அட்டை, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, இ-ரேஷன் அட்டை, கடந்த மூன்று மாதங்களுக்கான மின்சார அல்லது எரிவாயு கட்டண ரசீதுகள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான சட்டப்பூர்வ இருப்புச் சான்று ஆகியவற்றை பரிசீலிக்கலாம்.  வயதுச் சான்றிற்கு பாஸ்போர்ட், பள்ளி மதிப்பெண் சான்றிதழ, பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் அரசுத் துறைகளால் வழங்கப்படும் அடையாள அட்டைகள் ஆகியவை அடங்கும் ஆதார், கடவுச்சீட்டுகள், இ-ரேஷன் அட்டைகள் மற்றும் பான் ஆகியவை ஏற்றுக்கொள்ளக்கூடிய அடையாளச் சான்றுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

30 நாட்களுக்குள் அனுமதி:

பரிந்துரைகளின்படி, பாதுகாப்பான ஓட்டுநர் பயிற்சி குறைந்தது 30 நிமிடங்கள் நீடிக்க வேண்டும். அதே சமயம், 75% என்ற உயர் தகுதி மதிப்பெண், மதிப்பீட்டை மேலும் கடுமையாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உரிமம் வழங்கும் அதிகாரிகள், பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட ஓட்டுநர் உரிம விவரங்களை மாற்றுவதற்கான இணையவழி விண்ணப்பங்களை, நிராகரிப்பதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு. 15 நாட்களுக்குள் அங்கீகரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும். 30 நாட்களுக்கு முகவரி மாற்றம் செய்யப்படாமல் இருக்கும் விண்ணப்பம், தாமாகவே அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், நகல் உரிமங்கள் வழங்குதல், வாகனப் பிரிவைச் சேர்த்தல் மற்றும் தனிப்பட்ட விவரங்களில் மாற்றங்கள் செய்தல் போன்ற சேவைகளுக்காக ஒரு ஒருங்கிணைந்த விண்ணப்பப் படிவமும் முன்மொழியப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks