DHANUSH: தனுஷ் அரசியல் என்ட்ரிக்கு யார் காரணம்? விஜய்க்கு சரியான போட்டியாளரா?

DHANUSH: தனுஷ் அரசியல் என்ட்ரிக்கு யார் காரணம்? விஜய்க்கு சரியான போட்டியாளரா?
News Image

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி இரண்டே ஆண்டுகளில் அதிக இடங்களில் வெற்றிபெற்று முதல்வர் அரியணையில் அமர்ந்து அனைத்து தரப்பினருக்கும் பேரதிர்ச்சியை அளித்தார். இது அரசியல் வட்டாரங்களில் மட்டுமின்றி சினிமா நட்சத்திரங்களுக்கும் உத்வேகத்தை அளித்தது. ஏனென்றால் எம்.ஜி.ஆருக்கு பின் ஒரு உச்சநடிகர் தனியாக கட்சி ஆரம்பித்து ஆட்சியமைத்தது என்பது சினிமா நடிகர்கள் பலருக்குள்ளும் தூங்கிக்கிடந்த அரசியல் ஆசையை துளிர்விடச் செய்துள்ளது என்று கூறுவதே சரியாக இருக்கும்.

ரசிகர்களை எதற்கு தயார்படுத்துகிறார் தனுஷ்?

இந்த வரிசையில் முதல் நபராக அறியப்படுபவர் நடிகர் தனுஷ். ரசிகர்களை சந்திப்பது, ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றியது, வேஷ்டி சட்டை அணிந்து தோன்றுவது இவை மட்டுமின்றி ஆங்காங்கே அவரது ஆதரவாளர்கள் சிலர் அரசியல் நுழைவு குறித்த கருத்துக்களை வெளியிட்டதும் பரபரப்பாக பேசப்பட்டது. இவ்விவகாரம் டீக்கடை முதல் அரசியல் வட்டாரங்கள் வரை, "என்ன இந்த நடிகரும் அரசியலுக்கு வருகிறாரா அதான் இந்த தீவிர நடவடிக்கையா ?" என்றே பேசப்பட்டது. ஆனால், நடிகர் தனுஷ் தனது அரசியல் என்ட்ரி குறித்து இதுவரை எந்தக்கருத்தையும் வெளியிடவில்லை.

விஜய்தான் முன்மாதிரி.....தனுஷ் என்ட்ரியை ஆதரிக்கும் தவெக?

தனுஷின் அரசியல் சார்ந்த நகர்வுகள் குறித்துப் பேசிய தவெக செய்தித்தொடர்பாளர் சத்யகுமார், அரசியல் களத்தில் புதிய முயற்சிகளைத் தொடங்க விரும்புபவர்களுக்கு தவெக ஒரு முன்மாதிரியாகவும் உத்வேகமாகவும் திகழ்வது தவெகவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் முதல்வரானது அவரது 30 ஆண்டுகால உழைப்புக்கு கிடைத்த வெற்றி எனவும், புதியவர்கள் அரசியலுக்கு வருவது எளிது ஆனால் நிலைத்து நிற்க முழு அர்ப்பணிப்பு அவசியம் எனவும் சத்யகுமார் குறிப்பிட்டார்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிதல்லவே!

நடிகர்கள் ஒரு அரசியல் கட்சியில் இணைவது அல்லது புதிதாக கட்சி தொடங்குவது என்பது ஏதோ சில ஆண்டுகளாக நடைபெறுவது அல்ல. அது நீண்ட நெடிய வரலாற்றை கொண்டது இன்னும் சொல்லப்போனால் விஜய் மட்டுமின்றி அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோரும் சினிமா பின்னணி கொண்டவர்கள் என்பது நாம் அறிந்ததே. மேலும், சிவாஜி, விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் ஆகியோரும் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் தடம் பதித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு காலமே பதில் கூற இயலும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks