CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?

CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
News Image

தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை ஆட்சிக்கட்டிலில் அமர்பவர்களுக்கும் பல்வேறு விவகாரங்கள் சவாலாக இருந்து வரும் சூழலில், ஆட்சியில் அமர்பவர்கள் அனைவருக்கும் எப்போதும் சவாலாக இருப்பது மழைக்காலத்தை சமாளிப்பதே ஆகும். குறிப்பாக, சென்னை பெருமழை ஆட்சியாளர்களின் ஆட்சியை ஆட்டிப்படைக்கும் அளவிற்கு சவால் அளிக்கிறது.

2016 வெள்ளம்:

கடந்த 2016ம் ஆண்டு சென்னை சந்தித்த பெருவெள்ளம் மொத்த சென்னையையும் ஸ்தம்பிக்க வைத்தது. அந்த துயர சம்பவம் சென்னையின் வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகவே உள்ளது. அதன்பின்னர், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியதன் அவசியமும், நீர் வழித்தடங்கள் முறையாக கடலுக்குச் செல்ல வேண்டியதில் எந்த தடையும் இல்லாமல் இருப்பதையும் அடுத்தடுத்து வந்த அரசுகள் உணரத் தொடங்கின.

அதற்கான முன்னெடுப்புகளை அப்போதைய அதிமுக, அதற்கு அடுத்து வந்த திமுக அரசுகள் மேற்கொண்டாலும் சென்னை மாநகரின் உட்புறத்திலும் சாலைகளிலும் வெள்ளம் போல மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதையும், சாலையில் மழைநீரும் சாக்கடை நீரும் ஒன்றாக கலந்து ஓடுவதையும் தடுப்பது சவாலாகவே அமைந்து வருகிறது.

காரணங்கள்:

இதற்கான பணிகளில் கடந்த கால அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் அவர்களால் இதற்கு நிரந்தர தீர்வு காண முடியவில்லை. இதற்கு மெட்ரோ பணிகள் நடப்பது மட்டுமின்றி ஆக்கிரமிப்புகள் இன்னும் முழுமையாக அகற்றப்படாமல் இருப்பதும், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை ஆங்காங்கே சாக்கடைகளில் கொட்டப்படுவதும் ஒரு முக்கிய காரணம்.

போக்குவரத்து நெரிசல்:

நேற்று பெய்த மழையிலே சென்னையின் நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, பாரிமுனை, வடபழனி, ஆலந்தூர், மடிப்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், கோடம்பாக்கம் போன்ற பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் ஆறு போல ஓடியது. பல இடங்களில் முட்டியளவு தண்ணீர் தேங்கியது. சுரங்கப்பாதைகள் பலவற்றிலும் தண்ணீர் தேங்கியதாலும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியதுடன் போக்குவரத்து நெரிசலும் உண்டாகியது.

ஆயுதபூஜை பண்டிகைக்காக மக்கள் வெளியூருக்கு மும்முரமாக சென்று கொண்டிருக்கும் தருணத்தில் இதுபோன்ற மழை பெய்து சாலைகளில் தண்ணீர் ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அடுத்தடுத்த வாரங்களில் தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற விசேஷங்கள் வருவதால் அப்போதும் மழையால் இதுபோன்ற சிரமம் ஏற்பட்டால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும்.

சவாலை சமாளிப்பாரா விஜய்?

கடந்த கால திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிக்கும் சென்னை பெருமழையை கையாண்ட விவகாரத்தில் பல விமர்சனங்கள் இருந்து வருகிறது. இந்த நிலையில், தவெக அரசு இந்த விவகாரத்தை முறையாக கையாளவிட்டால் அவர்களும் கடந்த கால ஆட்சியாளர்கள் எதிர்கொண்ட விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும்.

சென்னை மாநகரின் பெருமழை காலத்தை எதிர்கொள்வதில் பல சிரமங்கள் இருந்தாலும் தொலைநோக்கு பார்வையுடன் இதற்கு நிரந்தர தீர்வு காணும் திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இப்படி ஒரு திட்டத்தை விஜய் கையில் எடுத்துச் செயல்படுத்தினால் சென்னையின் வரலாற்றை மாற்றியமைத்த தலைவராக விஜய் இடம்பெறுவார். ஆனால், அது அவ்வளவு எளிதில் சாத்தியமற்ற ஒன்றாகும். இதற்கு முறையான திட்டமிடலும், சரியான நிபுணர்களும் கொண்ட குழுவால் மட்டுமே முடியும்.

முதன்முறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள தவெக ஆட்சி இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது? என்பதை அடுத்தடுத்து வரும் நாட்களில் காணலாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks