தமிழ்நாட்டில் காலியாக இருந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்தி தவெக வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்த இரு தொகுதிகளுக்கான புதிய திட்டங்களை தவெக அரசு அறிவித்துள்ளது.

தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்:

முதலமைச்சர் விஜய் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

1. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 455 ஊரக குடியிருப்புகளில் 1,223 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தாராபுரம், காங்கேயம், குண்டடம், பொங்கலூர், வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மூலனூரின் 7 ஊராட்சிகள், பல்லடத்தின் 17 ஊராட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 1,232 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றுநீரினை ஆதாரமாகக் கொண்ட புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் 1439 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

2. தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடற்றவர்களுக்கு 2,700 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும். தாராபுரம் வட்டம், சின்னப்புத்தூர் கிராமம், மஜரா குருவப்ப நாயக்கன் பாளையத்தில் 20 ஆண்டுகளாக வீடுகட்டி குடியிருந்து வரும் 87 குடும்பங்களுக்குப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Chief Minister Vijay announces new schemes for the Dharapuram Assembly constituency https://t.co/oOYkyPrFAU

— Kannan Jeevanantham (JK) (@Im_kannanj) October 19, 2026

3.திருப்பூர் மாவட்டத்தில் பாசன கால்வாய்களில் உள்ள மண்திட்டுக்களை அகற்றி தூர்வாரும் 159 பணிகள் சுமார 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாசன வாய்க்கால்களில் உள்ள மண்திட்டுகள், புதர்கள் மற்றும் முட்செடிகளை அகற்றி சுமார் 271 கி.மீட்டர் நீளத்தி்றகு வாய்க்கால்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

4. தாராபுரம் மூலனூர், குண்டடம் வட்டாரங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து சுமார் 13 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

5. தாராபுரம் வட்டம் மூலனூரில் ஒரு புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்கப்படும்.

6. தாராபுரம் நகராட்சியில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளும், சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளும், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளும், மேலும் மழைநீர் வடிகால் மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article