கோவை மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் பெரியார் நூலகம் கட்டப்பட்டு வந்தது. பணிகள் முடிந்து இந்த நூலகம் திறப்பிற்காக தயாராக இருந்து வந்த நிலையில், இன்று இந்த நூலகம் திறக்கப்படுகிறது.

கோவை செல்லும் முதலமைச்சர்:

அறிவுலகம் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று திறந்து வைக்கிறார். இதற்காக முதலமைச்சர் விஜய் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவை செல்கிறார். சென்னையில் இருந்து புறப்படும் விஜய் காலை 11 மணிக்கு விமானம் மூலமாக கோவை சென்றடைகிறார்.

கோவை வந்தடையும் முதலமைச்சர் விஜய் அங்கிருந்து காந்திபுரம் வரை ரோடு ஷோ எனப்படும் சாலை வலம் செல்கிறார். முதலமைச்சர் விஜய்யின் வருகையை முன்னிட்டு கோவை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரோடு ஷோ:

சாலை வலம் வழியாக செல்லும் முதலமைச்சர் விஜய் 11.45 மணிக்கு காந்திபுரம் வந்தடைகிறார். 11.4 கிலோமீட்டர் விஜய் ரோடு ஷோ செல்வதை முன்னிட்டு அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்களும், அவரது ரசிகர்களும் குவிவார்கள் என்று கருதப்படுகிறது. விஜய்யின் சாலை வலத்தை முன்னிட்டு அந்த சாலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

11.45 மணிக்கு பெரியார் நூலகத்தை திறந்து வைக்கும் விஜய் பின்னர் சுமார் 200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் திறந்து வைக்கிறார். கோவையில் உள்ள நிகழ்வுகளை முடித்துக் கொள்ளும் விஜய் மதியம் 1.06 மணிக்கு காந்திபுரத்தில் இருந்து புறப்படுகிறார். பின்னர், 1.40 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.

குருவாயூர் கோயிலுக்கு பயணம்:

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருச்சூர் செல்கிறார். அங்கு உலகப் புகழ்பெற்ற குருவாயூர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செல்கிறார். கேரளாவில் விஜய்க்கு தமிழ்நாட்டைப் போல ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். முதலமைச்சரான பிறகு முதல்முறையாக விஜய் கேரளா செல்வதால் அங்கு அவரை வரவேற்க ரசிகர்கள் குவிவார்கள் என்று கருதப்படுகிறது.
பின்னர், மாலை கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கோவை திரும்பும் அவர் பின்னர் மீண்டும் சென்னைக்கு தனி விமானம் மூலமாக திரும்புகிறார்.

மாணவ, மாணவிகளுடன் சந்திப்பா?

கோவையில் விஜய்யின் நிகழ்ச்சி மதியம் 1.05 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர் 2வது தளத்தில் மாணவ, மாணவிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவையில் அமைக்கப்பட்டுள்ள விண்வெளியில் செல்வதை போன்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய ஸ்பேஸ் லிப்டில் பயணிப்பாரா? அங்குள்ள அனைத்து தளங்களுக்கும் செல்வாரா? என்பாரா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

Source: Read Full Article