CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்

CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
News Image

CM Vijay PM Modi: பிரதமரின் இன்றைய சென்னை வருகையின் போது அவருடைய குறிப்பிட்ட சில அரசு நிகழ்ச்சிகளில் மட்டுமே முதலமைச்சர் பங்கேற்க உள்ளார்.

பிரதமர் மோடி தமிழகம் வருகை:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பிறகு, பிரதமர் மோடி இன்று முதல்முறையாக இங்கு வருகை தரவுள்ளார். இந்த பயணத்தின் போது மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற நலத்திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார். அதோடு சில புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற உள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக விஜய் இன்று பிரதமர் மோடி உடனான அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அதுவும் பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில் மட்டுமே இருவரும் சேர்ந்து மேடையேற உள்ளனர். அவற்றின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் இன்றைய நிகழ்ச்சி நிரல்

சுமார் 11:30 மணியளவில் பிரதமர் மோடி சென்னை மெட்ரோவில் போரூர் புறவழிச்சாலை நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையம் வரை சென்று திரும்புவார்.

மதியம் சுமார் 12:15 மணியளவில் போரூரில் உள்ள ஜெலகண்டேஸ்வரர் கோயிலில் தரிசனம் மற்றும் பூஜை செய்வார்.

அதைத் தொடர்ந்து அவர் ஐஐடி மெட்ராஸில் உள்ள Brain Center-ஐ நேரில் பார்வையிடுவார்.

பிற்பகல் சுமார் 1:30 மணியளவில், ரூ.13,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார், முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைப்பார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுவார்.

பிற்பகல் சுமார் 3 மணியளவில், சென்னையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுவார்

விஜய் - மோடி ஒன்றாக பங்கேற்கும் நிகழ்ச்சிகள்:

பிரதமர் மோடியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதலமைச்சர் விஜய் பங்கேற்கப்போவதில்லை. குறிப்பாக ஜலகண்டேஷ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம், மெட்ராஸ் ஐஐடி பயணம் மற்றும் தனியார் பள்ளி பொன் விழா கொண்டாட்டம் போன்றவற்றில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க மாட்டார். அதேநேரம், போரூர் தொடங்கி பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயிலில் இருவரும் ஒன்றாக பயணிக்க உள்ளனர். மேலும், நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியிலும் இருவரும் ஒன்றாக மேடையேற உள்ளனர்.

இதையும் படியுங்கள்:TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்

முக்கிய திட்டங்கள்:

பிரதமர் மோடியின் இன்றைய சென்னை வருகையின் போது 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவதோடு, முடிவுற்ற பணிகளை நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிக்கிறார். இதில் மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், பெட்ரோலியம் மற்றும் கல்வித் துறைகளின் திட்டங்கள் அடங்கும். அதன்படி மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமான பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டித் திறந்து வைக்கிறார். சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் மற்றும் வி.ஓ. சிதம்பரம் துறைமுகம் ஆகிய இடங்களில் துறைமுகத் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். பழனி, வேலூர் கண்டோன்மென்ட், அம்பாசமுத்திரம், பரமக்குடி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் ஐந்து அமிர்த நிலையங்களை திறந்து வைக்கிறார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks