சென்னையில் இன்று மாலை அதிகனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை செல்போன் அலாரம் மூலம் எச்சரிக்கை விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்துச் செல்போன்களுக்கும் அலாரம் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “சென்னையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும். அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் மழைப்பொழிவு மேலும் தீவிரமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. கிட்டதட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக அதி தீவிர மழை இருந்த நிலையில் விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்தது. மேகவெடிப்பு காரணமாக இந்த மழை இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் மேகக்கூட்டங்கள் ஒரே இடத்தில் திரண்டதால் அதிக மழை இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Daily weather Briefing 18-10-2026 The Wet spell with isolated heavy to very heavy rainfall likely to continue over Tamil Nadu, Puducherry & Karaikal till 24th; over Coastal Andhra Pradesh & Yanam, Rayalaseema and South Interior Karnataka on 18th and isolated heavy rainfall also likely to continue over Kerala & Mahe, South Interior Karnataka till 24th; Coastal Andhra Pradesh & Yanam and Rayalaseema till 21st October, 2026. https://t.co/lv77mUP4lR

— India Meteorological Department (@Indiametdept) October 18, 2026

தமிழ்நாட்டில் கொட்டித் தீர்க்கும் கனமழை

இதனிடையே தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதேசமயம் சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 24ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 24ஆம் தேதி வரை மழை தொடர வாய்ப்புள்ளது. ஆங்காங்கே கன முதல் மிகக் கனமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும் கடலோர ஆந்திரப் பிரதேசம், ஏனாம், ராயலசீமா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் 18ஆம் தேதி மழை எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கேரளா, மாஹே மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் 24ஆம் தேதி வரையிலும் மழைப்பொழிவு இருக்கும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article