Chennai Rain Alert: மாலை தொடங்கி நாளை அதிகாலை வரை தீவிர மழைக்கு வாய்ப்புள்ளதாக, தனியார் வானிலை ஆர்வளரான பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சனிக்கிழமை மாலை தொடங்கி இரவு வரை விடிய விடிய சென்னையில் கனமழை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு லேசான மழை மட்டுமே பதிவாகி வருகிறது. இந்நிலையில் தான் இன்று முதல் சென்னையை உள்ளடக்கிய பெருநகர் பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் என தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

சென்னைக்கு தீவிர மழை எச்சரிக்கை:

இதுதொடர்பாக பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சென்னை – விடுமுறையிலிருந்து திரும்புபவர்களுக்கு மழையுடன் கூடிய வரவேற்பு. வட சென்னையில் தற்போது தொடங்கியுள்ள நல்ல மழைப்பொழிவு, சென்னையின் மற்ற பகுதிகளுக்கும் விரிவடையும். இன்று முதல் சென்னையில் (KTCC) பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. பகல் நேரங்களில் திடீரென, குறுகிய நேரத்திற்குத் தீவிரமாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதனைத் தொடர்ந்து வெயில் இடைவெளிகள் காணப்படும். மாலையிலிருந்து இரவு வரை மழையின் தீவிரம் அதிகரித்து, அதிகாலை வரையிலும் தொடர வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக, வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தொடர்ந்து தீவிரமாக உள்ளது” என எச்சரித்துள்ளார்.

Chennai – Rainy Welcome for Those Returning from Holidays. Very good spell starting in North Chennai now should cover other parts of Chennai too. ====================== Monsoon activity is picking up over Chennai (KTCC) from today. Expect sudden, short and intense spells of rain during the daytime, followed by sunny breaks. Rain intensity is likely to increase from evening into the night and continue through the early morning hours. Overall, the Northeast Monsoon remains active over Tamil Nadu. A detailed update covering the rest of Tamil Nadu will be posted separately.

— Tamil Nadu Weatherman (@praddy06) October 20, 2026

வானிலை மையம் சொல்வது என்ன?

முன்னதாக நேற்று வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், “சுமார் 5.8 கிமீ உயரம் வரை வட தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரம் வரை வட தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: RC Book: வண்டியின் RC புக்கை தொலைத்துவிட்டீர்களா? வீட்டில் இருந்தே நகலை பெறுவது எப்படி? கட்டணம், வழிமுறை

மிக கனமழை எச்சரிக்கை:

அதன் காரணமாக இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Source: Read Full Article