Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!

Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
News Image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள உள்ள பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பகல் நேரத்தில் வெயில் இருந்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை அடிச்சு ஊத்துகிறது. இந்நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடை விடாமல் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ரெட் அலர்ட்

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 6 இடங்களில் அதி கனமழையும் (20 செ.மீ.க்கு மேல்), 12 இடங்களில் மிக கனமழையும் (11.5 செ.மீ.க்கு மேல்) பதிவானது. அதிகபட்சமாக பாரிமுனையில் 36.3 செ.மீ., கத்திவாக்கத்தில் 34.4 செ.மீ., மீனம்பாக்கத்தில் 29 செ.மீ. மழை பதிவானது. இந்நிலையில் இன்றும் சென்னையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க: மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!

வெதர்மேன் பிரதீப் ஜான்

இந்நிலையில் சென்னையில் இன்று மழை பெய்தாலும் நேற்று பெய்ததை போல இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னையைப் பொறுத்தவரை, அடுத்து கவனிக்க வேண்டிய முக்கியமான தேதிகள் அக்டோபர் 21-22  இருக்கலாம்.சென்னையில் இன்று இரவு மழை பெய்யக்கூடும். ஆனால் 'ரெட் அலர்ட்' அளவிலான மழை பெய்யுமா? என்பது சந்தேகம் தான்.

சென்னையில் மேலடுக்கு சுழற்சியின் (UAC) காரணமாக, இடைவெளி ஏதுமின்றி தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் 200 மி.மீ மழை பதிவானதில்லை. தற்போதைய மேலடுக்கு சுழற்சி சென்னைக்கு அருகில் இருப்பதால் மேகங்கள் ஒன்றிணையும் பகுதி (convergence zone) சென்னைக்குச் சற்று வடக்கே அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?

பெரிய அளவில் மழை இருக்காது

இன்று மழை பெய்தாலும் நேற்று பெய்ததை போன்று பெரிய அளவில் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.மேலடுக்கு சுழற்சிக்கு வடக்கே இருக்கும் என்பதால், தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.எனவே, நேற்று நடந்தது போன்ற மிக கனமழை, இன்று சென்னை முழுவதும் மீண்டும் பரவலாகப் பெய்ய வாய்ப்பு மிக குறைவு என்றே தோன்றுகிறது. ஒருவேளை நேற்று இருந்தது போல ஏதேனும் மேகக் கூட்டங்கள் உருவானாலோ அல்லது பெருமளவில் மேகங்கள் ஒன்றிணைந்தாலோ அதுகுறித்த தகவலை உடனே தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks