சென்னையில் இன்றும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழையால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் இன்றும் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் இன்றும் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. வட தமிழகம் மீது நிலவும் வளிமண்டல சுழற்சியால் அப்பகுதிகள் மீது இன்றும் மழை மேகங்கள் உருவாகும் சூழல் இருப்பதால் இதன் காரணமாக மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்றிரவு 3 மணி நேரத்தில் மேகவெடிப்பு போன்ற மழை பதிவானது. அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 26 செ.மீ., மழை பெய்துள்ளது.

புகார் அளிக்க எண் அறிவிப்பு

சென்னையில் மழை பாதிப்பு குறித்த புகார்களை அதிகாரிகளிடம் தெரிவிக்க தமிழக அரசு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.

திருவொற்றியூர் 94451 90001

மணலி 94451 90002

மாதவரம் 94451 90003

தண்டையார்பேட்டை 94451 90004

ராயபுரம் 94451 90005

திரு.வி.க.நகர் 94451 90006

அம்பத்தூர் 94451 90007/08

தேனாம்பேட்டை 94451 90009

கோடம்பாக்கம் 94451 90010

வளசரவாக்கம் 94451 90011

ஆலந்தூர் 94451 90012

அடையாறு 94451 90013

பெருங்குடி 94451 90014

சோழிங்கநல்லூர் 94451 90015

1913 மற்றும் சென்னை மாநகராட்சியின் வாட்ஸ் ஆப் சாட்பாட் 94450 61913 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம்.

NDRF வீரர்கள் வருகை

சென்னை கனமழை தொடரும் நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் வருகை தந்துள்ளனர். முதற்கட்டமாக தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 30 வீரர்கள் வேளச்சேரிக்கு வந்துள்ளனர்.

Source: Read Full Article