Chennai Flyover: சென்னையில் புதிய 4 வழி மேம்பால சாலை..! 3.2KM நீள ட்ராஃபிக்கிற்கு குட்பாய் - எந்த ஏரியாக்கள் தெரியுமா?

Chennai Flyover: சென்னையில் புதிய 4 வழி மேம்பால சாலை..! 3.2KM நீள ட்ராஃபிக்கிற்கு குட்பாய் - எந்த ஏரியாக்கள் தெரியுமா?
News Image

CMRL Teynampet - Saidapet Flyover: தேனாம்பேட்டை தொடங்கி சைதாப்பேட்டை வரையிலான மேம்பாலம், தேனாம்பேட்டை டூ நந்தனம் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மேலே அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேனாம்பேட்டை டூ சைதாப்பேட்டை - புதிய மேம்பாலம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள, மெட்ரோ ரயில் சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் நகர் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனாம்பேட்டை மற்றும் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மேலே, 3.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைய உள்ள உயரடுக்கு நான்கு வழிப்பாதைக்கான கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதுதொடர்பான பணிகளை மேற்கொள்ள மாநில நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அண்மையில் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2.3 கி.மீ. நீளத்திற்கு தரைச்சாலை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு மெட்ரோ நிலையங்களுக்கு மேலான கட்டுமானப் பணிகள் கடந்த சில மாதங்களாக அண்ணா சாலையில் முடங்கிக் கிடப்பது குறிப்பிடத்தக்கது.

3.2KM மேம்பால டிசைனில் மாற்றங்கள்:

மாநில நெடுஞ்சாலைத் துறை சமர்பித்த விரிவான திட்ட அறிக்கையில் சில லேசான மாற்றங்கள் காணப்பட்ட நிலையில், இரண்டு மெட்ரோ நிலையங்களுக்கு மேலே போர்ட்டல் ஃப்ரேம்களை (portal frames) அமைப்பதற்கான வடிவமைப்பை ஆய்வு செய்யவும், தேவையான மாற்றங்களைப் பரிந்துரைக்கவும் ஜப்பானை சேர்ந்த  துறைசார் வல்லுநரை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் நியமித்தது.  அவருடன் சேர்ந்து மாநில நெடுஞ்சாலை ஆணையம் இணைந்து நடத்திய ஆய்வுகளை தொடர்ந்து, வடிவமைப்பில் பெரிய குறைபாடுகள் எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. அதோடு இரண்டு மெட்ரோ நிலையங்களுக்கு மேலே, 300 மீட்டர் நீளத்திற்கு ஒவ்வொரு 15 மீட்டர் இடைவெளியில் போர்டல் ஃப்ரேம்களை நிறுவுமாறு ஜப்பானைச் சேர்ந்த ஆலோசகர் பரிந்துரைத்தார். அதனை ஏற்று புதிய மேம்பாலத்திற்கான கட்டுமானப் பணிகளைத் தொடர சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

கட்டுமான பணிகள் எப்போது முடியும்?

போர்டல் ஃப்ரேம் என்பது ஒரு உத்திரத்தின் மூலம் இரண்டு தூண்களை இணைக்கும் ஒரு திடமான கட்டமைப்புச் சட்டகம் ஆகும். மேம்பால வழித்தடத்தில் கான்க்ரீட் தளத்தை அமைக்க இரும்பு தூண்கள் நிறுவப்பட்டு வரும் நிலையில், இரண்டு மெட்ரோ நிலையங்களுக்கு மேலே உள்ள 300 மீட்டர் நீளப் பகுதிக்கு மட்டும் போர்ட்டல் ஃப்ரேம்கள்பயன்படுத்தப்படும். அவற்றின் மீது 4 வழி சாலை அமைக்கப்படும்.  சாலை மட்டத்திலிருந்து 14-15 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள மெட்ரோ நிலையங்களின் சுவர்கள் மீது, இந்த போர்ட்டல் ஃப்ரேம்களின் இரு கால்களும் நேரடியாக நிலைநிறுத்தப்படும். போக்குவரத்து மாற்றங்களைத் தவிர, வேறு எந்தவொரு கூடுதல் அனுமதிகளையும் பெற வேண்டிய அவசியமில்லாததால்,  கட்டுமான பணிகளானது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடைந்து மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: TN Govt: பதவிகளை குறைத்து, பணத்தை மிச்சைப்படுத்த விஜய் அரசு முடிவு..! காலியாகும் அரசுப் பணியிடங்கள், யாருக்கு ஆப்பு?

உயரடுக்கு 4 வழிப்பாதை விவரம்:

மொத்தமுள்ள 3.2 கிலோ மீட்டர் நீளப்பாதையில்  2.4 கிலோ மீட்டரானது மெட்ரோ சுரங்கப்பாதைகளுக்கு நேரே மேலே செல்கிறது. இதில் தேனாமெபேட்டை மற்றும் நந்தனம்  மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மேலே செல்லும் 460 மீட்டர் நீளப்பகுதியும் அடங்கும். மீதமுள்ள 655 மீட்டர் தூரம், நுழைவு மற்றும் வெளியேறும் சரிவுப்பாதைகளைத் தவிர்த்து, மெட்ரோ அல்லாத பகுதியில் அமைந்துள்ளது. மேம்பாலத்திற்காக திட்டமிடப்பட்ட மொத்தமுள்ள 69 தூண்களில் 50 தூண்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

ரூ. 621 கோடி செலவில் கட்டுமான அதிசயம்:

புதிய மேம்பாலமானது நிலத்தடி மெட்ரோ பாதைக்கு மேலே செல்வதால், சிக்கலான பொறியியல் வடிவமைப்பால் திட்டத்தின் செலவு ரூ.621 கோடியாக உயர்ந்துள்ளது.இது ஒரு வழக்கமான நெடுஞ்சாலைத் திட்டத்தை விட மிகவும் அதிகமான செலவாகும்.  தேனம்பேட்டை-சைதாப்பேட்டை மெட்ரோ சுரங்கப்பாதை அண்ணா சாலையின் கீழ் 14-15 மீட்டர் ஆழத்தில் செல்கிறது. அந்த வழித்தடத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, நெடுஞ்சாலைத் துறை மேம்பாலத்தின் அடித்தளங்களை அமைப்பதற்காக சாலை மேற்பரப்பிலிருந்து 7 மீட்டர் ஆழம் வரை மட்டுமே துளையிட்டுள்ளது. இதனால் செயல்பாட்டில் உள்ள மெட்ரோ சுரங்கப்பாதைக்கு நேராக மேலே கட்டப்படும் நாட்டின் முதல் உயர்மட்டப் பாதை என்ற பெரும் இதற்கு உள்ளது.

மேம்பாலத்தின் பலன்கள் என்ன?

தினசரி ஒரு லட்சம் முதல் இரண்டரை லட்சம் வரையிலான வாகனங்களை கையாளும் அண்ணா சாலையில், அண்ணா அறிவாலயம் தொடங்கி சைதாப்பேட்டை சிக்னல் வரையிலும் புதிய மேம்பாலம் அமைகிறது. இதனால்

எல்டாம்ஸ் சாலை, SIET கல்லூரி, செனோடாஃப் சாலை, நந்தனம், சிஐடி நகர் மூன்றாவது மற்றும் முதல் பிரதான சாலைகள் டாட் ஹண்டர் நகர்-ஜோன்ஸ் சாலை போன்ற அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள ஐந்து முதல் ஆறு முக்கிய சந்திப்புகளை வாகன ஓட்டிகள் சுமூகமாக கடக்கலாம்

தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை மற்றும் மயிலாப்பூர் நோக்கிச் செல்பவர்கள் வேகமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளலாம்

சென்னையின் மிகவும் பரபரப்பான வணிக மற்றும் அலுவலக வழித்தடங்களில் ஒன்றில், இந்த மேம்பால புறவழிச்சாலை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் பயண நேரத்தை வேகப்படுத்துகிறது

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks