Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு

Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
News Image

Cancer Drugs: தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் புதிய உத்தரவால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை சேமிக்க முடியுமாம்.

குறையும் புற்றுநோய் மருந்துகளின் விலை:

மத்திய அரசின் மருந்து விலை கண்காணிப்பு அமைப்பான தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA), தொழிற்சாலையில் ஆகும் உற்பத்தி செலவுக்கும் நோயாளிக்கு வழங்கப்படும் விற்பனை விலைக்கும் இடையில் விற்பனையாளர்கள் எவ்வளவு தொகையைச் சேர்க்கலாம் என்பதற்கு உச்சவரம்பு விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் பல புற்றுநோய் மருந்துகளின் விலைகள் 20 முதல் 70 சதவிகிதம் வரை குறைந்து வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மலிவாக கிடைக்கலாம். வர்த்தக லாப வரம்பு எனப்படும் இந்த வித்தியாசத்தை, பொருளின் பேக்கெட்டில் அச்சிடப்பட்ட விலையான அதிகபட்ச சில்லறை விலையில் (MRP) 30 சதவிகிதமாக கட்டுப்படுத்தும் ஒரு முன்மொழிவுக்கு ஆணையம் (NPPA) கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நோயாளிகளுக்கான நிதி சுமை ஆண்டுக்கு சுமார் ரூ. 2,500 கோடி வரை குறையும் என அரசு மதிப்பிடுகிறது.

தயாராகும் மருந்துகளின் பட்டியல்:

ஒவ்வொரு மருந்தின் தற்போதைய வர்த்தகக் கட்டமைப்பு மற்றும் லாப விகிதத்தைப் பொறுத்து, இந்த நடவடிக்கை அதிகபட்ச சில்லறை விலையை 20 முதல் 70 சதவிகிதம் வரை குறைக்கும் என்று அது எதிர்பார்க்கிறது. இந்த ஒப்புதலானது, இதன் கீழ் கொண்டுவரப்பட வேண்டிய மருந்துகளின் பட்டியல் இறுதி செய்யப்படுவதைப் பொறுத்தது. இதனால் எதிர்பார்க்கப்படும் நன்மைகளில், நேரடிச் செலவினக் குறைவதோடு மேம்பட்ட மலிவுத்தன்மை மற்றும் அணுகல்தன்மை, அதிகப்படியான வர்த்தக லாப வரம்புக் குறைப்பு மற்றும் நோயாளிகளுக்குப் பொருந்தும் விலைகளில் அதிக வெளிப்படைத்தன்மை ஆகியவை அடங்கும். புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளில் நிலவும் அதீத லாப வேட்டையையும், அது நோயாளிகள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு, நுகர்வோர் நலனே முதன்மையானதாக முன்னிறுத்தி விலை குறைப்புக்கு தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்: IAS Transfer: உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு

பட்டியலை தயார் செய்ய குழு

அட்டவணைப்படுத்தப்படாத புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான வர்த்தக லாப வரம்பை முறைப்படுத்துமாறு, மருந்துத்துறை கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மருந்துகளை உள்ளடக்க வேண்டும் என்று பரிந்துரைப்பதற்காக, சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகத்தின் கீழ் ஒரு நிபுணர் குழுவை அமைக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 14, 2026-க்குள் அக்குழுவின் அறிக்கையை அது கோரியுள்ளது. சந்தை மற்றும் பொது சுகாதாரத் தேவைகள் மாறும் பட்சத்தில், இந்தப் பட்டியல் அவ்வப்போது புதுப்பிக்கப்படலாம்.

இந்தியாவில் புற்றுநோய் மருந்துகள்:

இந்தியாவின் 2022ம் ஆண்டுக்கான தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில், 63 புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் உட்பட 388 மருந்துகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலிடப்பட்ட மருந்துகள் ஏற்கனவே உச்சவரம்பு விலை நிர்ணய முறை மூலம் விலைக் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. புற்றுநோய் எதிர்ப்பு மருந்து சந்தையில் ஏறத்தாழ 225 மருந்துகளும், 500 மருந்துக் கலவைகளும் உள்ளன. இதன் ஆண்டு வருவாய் சுமார் ரூ. 12,500 கோடி ஆகும். இதில், அட்டவணைப்படுத்தப்பட்ட புற்றுநோய் மருந்துகளின் பங்கு ஏறத்தாழ ரூ. 2,250 கோடியாகவும், மீதமுள்ளவை அட்டவணைப்படுத்தப்படாத மருந்துகளாகவும் உள்ளன.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks