வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வானிலை மோசமடைந்து கடற்கரைகளில் பலத்த காற்று வீசிவருவதால் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, கடலூர், ராமேஸ்வரம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் புயல் உருவாகும் வானிலை நிலவுவதை அறிவிக்கும் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தல்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ள நிலையில் கடல்சீற்றம் மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை காரணமாக கடலூர், திருவள்ளூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Source: Read Full Article