வாயைத் திறந்தாலே பொய் தான்.. அமைச்சர் கீர்த்தனாவை வெளுத்து வாங்கிய மேயர் பிரியா!

வாயைத் திறந்தாலே பொய் தான்.. அமைச்சர் கீர்த்தனாவை வெளுத்து வாங்கிய மேயர் பிரியா!
News Image

தவெக அமைச்சர்கள் எல்லாரும் தங்கள் பொறுப்பை உணராமல் ரீல்ஸ் போட்டு சுற்றி வருவதாக சென்னை மேயர் பிரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை கிழக்கு மாவட்டக் கழக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில், துறைமுகம் மேற்குப் பகுதியில் இன்று நடைபெற்ற முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கனிமொழி எம்பி, கலாநிதி வீராசாமி, முன்னாள் எம்பி எம்.எம்.அப்துல்லா, மேயர் பிரியா ராஜன், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மேயர் பிரியா ராஜன், “திமுகவைச் சேர்ந்த நாங்கள் மேயராக, அமைச்சராக பொறுப்பேற்றவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்று சந்தித்தோம். அப்போது அவர் எங்களிடம் உங்களுக்கு கிடைத்திருக்கும் இது பதவி கிடையாது. பொறுப்பு என்பதால் அதனை உணர்ந்து ஒவ்வொரு நாளும் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

ஆனால் இன்றைக்கு தமிழக வெற்றிக் கழக அரசில் உள்ள ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களது பொறுப்பை உணராமல் ரீல்ஸ் போட்டு வருகின்றனர். அதிலும் கீர்த்தனா என்று ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் வாயைத் திறந்தாலே பொய்தான். சட்டமன்றத்தில் பொய்யான ஒன்றை சொல்லிவிட்டு பின்னர் அதனை அவை குறிப்பில் இருந்து நீக்கி விடுங்கள் எனவும் தெரிவிக்கிறார். இந்த மாதிரி தான் இன்று ஆட்சியில் இருப்பவர்கள் இருக்கிறார்கள்.

சென்னையில் செவிலியர் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.நம் வீட்டுப் பிள்ளைகள் நிறைய பேர் செவிலியர்களாக உள்ளனர். அவர்களின் சேவை மிகவும் மதிக்கக்கூடிய ஒன்றாகும். அதில் 18 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் தான் நிறைய பேர் உள்ளனர். அந்த பெண்களை எந்த அளவுக்கு துன்புறுத்த முடியுமோ அந்த அளவுக்கு செய்து போராட்டத்தில் இருந்து செவிலியர்களை வெளியேற்றி உள்ளார்கள்.

இது எந்த வகையில் ஜனநாயகமாக இருக்க முடியும்?.. நமக்கு ஏதாவது உடலில் பிரச்சனை என்றால் அதனை சரி செய்து கொடுக்கும் பணியில் இருக்கும் செவிலியர்கள், அவர்களை அடித்து விரட்டுவது எந்த வகை நியாயம்?.. இதே நிலைமை சென்றால் பெண்களுக்கான பாதுகாப்பு எங்கே இருக்கும் என்பது இந்த இங்கிருக்கும் அனைவருக்கும் கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது பெண்களுக்கான விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத் திட்டம் என பல கொண்டு வந்தார்.

திமுக இல்லை என்றால் இன்றைக்கு பெண்கள் சமையலறையில் தோசை கரண்டி அல்லது சாம்பார் கரண்டியை பிடித்துக் கொண்டிருக்கும் நிலை தான் ஏற்பட்டிருக்கும். இப்படி மேடையில் ஏறி பேசும் நிலை வந்திருக்காது. அந்த மாற்றத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks