சென்னையில் நடைபெற்ற மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது நீட் நுழைவுத் தேர்வு எதிர்த்து போராடி உயிர் நீத்த அனிதாவின் சகோதரர் மணிரத்தினத்துடன் ராகுல் காந்தியுடன் கலந்துரையாடினார்.

BAN NEET பதாகையில் கையெழுத்திட்ட ராகுல்

அப்போது அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் பேசுகையில்: தங்கை அனிதா சாதிய ரீதியாக, பொருளாதார ரீதியாக, பிறப்பிட ரீதியாக ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த குழந்தை. இன்னும் எங்கள் தந்தை மார்க்கெட்டில் மூட்டை தூக்குகிறார். மூட்டைகளை தூக்கி உழைத்து அனிதா உள்ளிட்ட ஐந்து பிள்ளைகளையும் தந்தை படிக்க வைத்தார்.எங்களை மேம்படுத்துவதற்கான ஒரே ஆயுதம், ஒரே வாய்ப்பு கல்வி தான் என்று தங்கை அனிதா நம்பினார். என் தங்கை அனிதாவிற்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வால் மருத்துவ இடம் கிடைக்கவில்லை. நீதிமன்றம் வரை போராடியும் நீதி கிடைக்காததால் உயிரை மாய்த்துக்கொண்டார். தமிழ்நாட்டின் நீட் தேர்வு தடை செய்ய வேண்டும். அதுதான் தங்கை அனிதாவின் மரணத்திற்கு நீதியாக அமையும் அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் கோரிக்கை விடுத்த நிலையில் BAN NEET பதாகையில் ராகுல் காந்தி கையெழுத்திட்டார்.

இதையும் படிங்க: "நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!

அனிதா அண்ணனை கட்டியணைத்த ராகுல்

பின்னர் மணிரத்தினத்தை கட்டியணைத்த பிறகு பேசிய ராகுல் காந்தி: நீட் தேர்வினால் 87 சதவீதம் தமிழ் மாணவர்களின் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் வெளி மாநிலத்தவர்களுக்கு செல்கிறது. 70 சதவீதம் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் இல்லாமல் இருக்கிறது. காரணம் ஆளுநர் தான். ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களால் பல்கலைக்கழங்கள் நடத்த நினைக்கிறார்.

இந்தியை திணிக்க முயற்சி

தமிழக மக்கள் மீது இந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர். தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி வரலாறு அனைத்தும் 2வது பட்சம் என்றும் இந்தி மொழி தான் முதன்மையானது என்று வெளிப்படையாக சொன்னவர் அமித்ஷா. புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் தமிழகத்திற்கான ரூ.3500 கோடியை விடுவிப்போம் என்று கூறுகின்றனர். தற்போது தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்தை வஞ்சிக்கிறது. தமிழ் கலாச்சாரம் மீதான தாக்குதலை அனுமதிக்க மாட்டோம்.

ஜனநாயகத்தை அழிக்கும் மோடி

டெல்லியில் ஒட்டுமொத்த நகரமும் முடக்கப்பட்டுள்ளது, இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். பாஜகவினர் தங்களது ஆதரவாளர்களை அனுப்பி மாணவர்களைத் தாக்கினர். இந்தியாவின் ஜனநாயகத்தை மோடி அழித்துக் கொண்டிருக்கிறார் என ராகுல் காந்தி ஆவேசமாக பேசியுள்ளார்.

Source: Read Full Article