தேனி மாவட்ட மக்களே கவனியுங்கள்! சுருளி, கும்பக்கரை அருவிகள் குறித்த முக்கிய அறிவிப்பு!

தேனி மாவட்ட மக்களே கவனியுங்கள்! சுருளி, கும்பக்கரை அருவிகள் குறித்த முக்கிய அறிவிப்பு!
News Image

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனச்சரணலாயத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் சுருளி அருவி அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை, வென்னியாறு மற்றும் சுருளி அருவியின் ஆற்றுப்படுகை பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்து மழை பொழிவு ஏற்பட்டுள்ளதால்  அருவிக்கு வரும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் மூன்றாவது நாளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவிப்பு  வெளியிட்டுள்ளனர். சுருளி அருவிப்பகுதியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிப்பதற்காக வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள்  ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இதே நேரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில்  பெய்த கனமழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானதால் இன்று முதல் சுற்றுலா பயணி அனுமதி வனத்துறை அறிவித்துள்ளது. பெரியகுளம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் கும்பக்கரை அருவிக்கு, வட்டக்கானல் மற்றும் பாம்பாறு உள்ளிட்ட மலைப் பகுதிகளில் இருந்து நீர்வரத்து  உள்ளது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக  மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான வட்டக்கானல் பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, கும்பக்கரை அருவிக்கு வரும் நீரின் அளவு  அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.​ இதனைத் தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின்  பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அருவிப் பகுதிக்குச் செல்லவும் குளிக்கவும் தேவதானப்பட்டி வனத்துறையினர்  கடந்த நான்கு நாட்களாக நாளாக தடை விதித்துள்ளனர். இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மலை குறைந்து நீர்வரத்து சீரானதால் இன்று முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks