ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் கட் சேவை அஞ்சல் முகவரி மூலம் பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது மாவட்ட நிர்வாகம் தகவல்

போலியான வேலை வாய்ப்பை நம்ப வேண்டாம்

மதுரை மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பணியிடங்களான உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஜீப்பு ஓட்டுநர் – 1, அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் – 1, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மற்றும் தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் – 2 என மொத்தம் 4 பணியிடங்களுக்கு, சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வ.ஊ.) மூலமாக பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன என தினசரி முன்னணி நாளிதழில் (11.09.2026) அன்று செய்தி வெளியிடப்பட்டது.

கட் சேவை அஞ்சல் முகவரி மூலம் பரவி வரும் அறிவிப்பு உண்மைக்கு புறம்பானதாகும்.

இந்நிலையில், மேற்கண்ட பணியிடங்கள் தொடர்பாக வரம்பு தவறுதலாக குறிப்பிடப்பட்டும், இனசுழற்சி முறை குறிப்பிடப்படாமலும், காலியாக உள்ள பணியிடங்கள் SC பிரிவினரைக் கொண்டு மட்டுமே நிரப்பப்படவுள்ளதாக கட் சேவை அஞ்சல் முகவரி மூலம் பரவி வரும் அறிவிப்பு உண்மைக்கு புறம்பானதாகும். மேற்கண்ட பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அரசின் நடைமுறைகள் மற்றும் இனசுழற்சி விதிமுறைகளின்படி மட்டுமே மேற்கொள்ளப்படும். எனவே, சமூக வலைதளங்கள் மற்றும் கட் சேவை அஞ்சல் முகவரி மூலம் பரவி வரும் தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான அறிவிப்புகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Source: Read Full Article