காரைக்குடியில் இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் ஏற்பட்ட மோதலில், இளம்பெண் மீது சாணியைக் கரைத்து ஊற்றி, விளக்கமாற்றால் தாக்கியதாக வீடியோ வைரலான நிலையில் போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

இன்ஸ்டா பிரபலம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரத்தைச் சேர்ந்தவர் அபி (23). இன்ஸ்டா பிரபலமான இவர் கல்லல் எழுமாப்பட்டியைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் கவியரசனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதல் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, கவியரசனுக்கும் காரைக்குடியைச் சேர்ந்த ஜெயஸ்ரீக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் அபியைப் பிரிந்து ஜெயஸ்ரீயுடன் அவர் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!

ஆபாச வார்த்தையால் அர்ச்சனை

இதனால் ஆத்திரமடைந்த அபியும், சகோதரி அருணா தேவி (27) பிரியா (30) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கடந்த 20ம் தேதி காரைக்குடி 100 அடி சாலையில் ஜெயஸ்ரீயைச் சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜெயஸ்ரீ மீது சாணியைக் கரைத்து ஊற்றி, விளக்கமாறு கையால் தாக்கி ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தனர்.

இதுகுறித்து ஜெயஸ்ரீ காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் அபி மற்றும் அவரது சகோதரி அருணா தேவி பிரியா ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இருவர் கைது

இந்நிலையில் இன்ஸ்டா பிரபலம் மீது சகோதரிகள் தாக்கிய வீடியோ வெளியாகி வைரலான நிலையில் வீடியோவை வெளியிட்டதாக சந்துரு என்ற வாலிபரையும் மற்றும் 30 வயதான பிரியாவையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Source: Read Full Article