மதுரையின் தொல்லியல் அதிசயங்கள்: சிவகங்கை தொல்நடைக்குழுவின் கள ஆய்வு!

மதுரையின் தொல்லியல் அதிசயங்கள்: சிவகங்கை தொல்நடைக்குழுவின் கள ஆய்வு!
News Image

மதுரை மாவட்ட தொல்லியல் தளங்களை பார்வையிட்ட சிவகங்கை தொல்நடைக்குழுவினர்.

தொன்மைகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

சிவகங்கையில் இயங்கி வரும் தொல்லியல் சார்ந்த குழுவான தொல்நடைக்குழுவினர், மாணவர்களிடத்தும் பொதுமக்களிடத்தும் தொல்லியல் சார்ந்த மரபுகளை தொன்மைகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொல்நடைப் பயணமாக களப்பயணமாக மரபு சார்ந்த தொல்லியல் தளங்களுக்கு மாணவர்களை பொதுமக்களை அழைத்துச் செல்லுதல்,  கல்வெட்டுகள் செப்பேடுகள்,தொல்லியல் தடங்கள்  போன்றவற்றைக்கண்டறிந்து, வெளிப்படுத்துதல், ஆவணப்படுத்துதல், அதை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற செயல்பாடுகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். தற்போது  பதினொன்றாவது தொல்நடைப் பயணத்தை சிறப்பாக நிறைவு செய்தனர். சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்நிகழ்வை தேசிய நல்லாசிரியரும் சிவகங்கை தொல்நடைக் குழுவின் வழிகாட்டியுமான செ. கண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

சமணமலை எனும் கீழக்குயில்குடியை முதலில் பார்வையிட்டனர்

சிவகங்கையில் இருந்து மதுரை வந்த குழுவினர் சமணமலை எனும் கீழக்குயில்குடியை முதலில் பார்வையிட்டனர். கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை மிகுந்த செல்வாக்குடன் சமணப் பள்ளியாகவும் இல்லறத்தார் வணங்கும் இடமாகவும், துறவியர் உறையும் இடமாகவும் விளங்கிய திருவுருவகம் எனவும் அமிர்த பராக்கிரமநல்லூர், எனவும் மாடக்குளத்துக்கு கீழ் நாட்டாற்றுக் குயிற்குடி எனவும் கல்வெட்டுகளில் வழங்கப்படும் சமண மலையில்  பேச்சிப்பள்ளத்தில் அமைந்துள்ள பாகுபலி, பாசுபத நாதர், முக்குடை அண்ணல் சிற்பங்களையும் அதன் கீழ் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகளையும் பார்வையிட்டனர், மராந்தக வீரநாராயணன் மனைவி வானவன்மாதேவி பெயரில் அமைந்த மாதேவிப் பெரும்பள்ளியையும் அதில் உள்ள கல்வெட்டுகளையும் பார்வையிட்டதோடு ஆடுறிச்சான் பாறை என வழங்கப்படும் இடத்தில் சமணப்படுக்கைகளும் தமிழி எழுத்துகளும்  இடம் பெற்றுள்ளதோடு வெண்மை நிற செஞ்சாந்து ஓவியங்களும் இடம்பெற்றுள்ளதை பார்வையிட்டனர்.

செட்டிப்புடவு.

கீழக்குயில் குடி மலையின் பின்பகுதியில் அமைந்துள்ள இயற்கை குகைத்தலமான குகையின் உள் பகுதியில் முக்குடை அண்ணல் சிற்பமும் அம்பிகா இயக்கியினது சிற்பமும் இடம் பெற்றுள்ள சிற்பத்தொகுதியை பார்வையிட்டதோடு அதன் வெளிப்பகுதியில் பெரிய சிற்பமாக அமைந்துள்ள  முக்குடை அண்ணல் மகாவீரர் சிற்பத்தையும் வட்டெழுத்துக்கல் வெட்டுகளையும்  கண்டு சுவைத்தனர்.

கொங்கர் புளியங்குளம்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தை அடுத்துள்ள கொங்கர் புளியங்குளம் மலை மீது அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட சமணப் படுக்கைகள் மற்றும் 3 தமிழி கல்வெட்டுகளை கண்டு வியந்தனர்.

திருமலை நாயக்கர் மகால்.

ஆக்ராவில் தாஜ்மஹால் கட்டப்பட்ட அதே காலத்தில் மதுரையில் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மகால் பெரும் சிதைவுக்குள்ளாகி இன்று மிச்சம் இருக்கிற திருமலை நாயக்கர் மகாலின் பேரழகைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர்.

இப்பயணத்தில் தொல்லியல் தளங்களின் சிறப்புகளை அவ்வவ்விடங்களில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர்,புலவர் கா.காளிராசா விளக்கிக்கூறினார். தொல்லியல் பயணத்தின் இடையில் தொல்லியல் பயணம் 11. கையேட்டை காவல் ஆய்வாளர்  காளீஸ்வரன் வெளியிட தமிழாசிரியர் மீனா  பெற்றுக் கொண்டார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் இரா. நரசிம்மன், இணைச்செயலர் க. முத்துக்குமரன் செய்திருந்தனர். இப்பயணத்தில் 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு  சிறப்பித்தனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks