“தமிழகத்தில் சிறுமி, பாட்டிக்கு பாதுகாப்பில்லை”: ஆர்.பி.உதயகுமார் ஆவேச விமர்சனம்!

“தமிழகத்தில் சிறுமி, பாட்டிக்கு பாதுகாப்பில்லை”: ஆர்.பி.உதயகுமார் ஆவேச விமர்சனம்!
News Image

தமிழகத்தில் சிறுமிக்கும் பாதுகாப்பில்லை; பாட்டிக்கும் பாதுகாப்பில்லை - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது...," தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் விஜய், தேர்தலுக்கு முன்பு விர்ச்சுவல் வாரியர்ஸை எவ்வளவு நேசித்தாரோ, அதைவிட ஒரு படி மேலே போய் தேர்தல் நேரத்தில், “உங்கள் மாமா, உங்கள் விஜய், உங்கள் அங்கிள் எனக்கு வாக்களிக்கச் சொல்லுங்கள்” என குழந்தைகளிடத்தில் பிஞ்சு மனதில் பச்சை மரத்தில் ஆணி அடித்ததைப் போல பதிவு செய்து, அதன் மூலம் அவர் வெற்றியும் பெற்றார். விஜய்க்காக தந்தையிடம், தாயிடம், தாத்தாவிடம், பாட்டியிடம், மாமாவிடம் அடம் பிடித்து விஜய்க்கு வாக்குகளைப் பெற்றுத் தந்த அந்தக் குழந்தைகளின் நிலைமைதான் அந்தோ பரிதாபமாக இருக்கிறது.

பிறந்தநாளைக் கொண்டாடிய 7 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் கவலையளிக்கிறது.

தவெக ஆட்சியில் நான்கு மாதங்களில் ஐந்து குழந்தைகள் மாயமான சம்பவங்கள், அந்தக் காட்சிதான் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்களைப் பார்க்கும்போது காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கிறதா? காவல்துறை அழுத்தத்தில் உள்ளதா? ஏனென்றால், இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறை, தமிழ்நாட்டில் மாயமான குழந்தைகளை இன்னும் கண்டறியாமல் உள்ளது. தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கவலையோடு உற்று நோக்குகிற சம்பவமாக, அக்டோபர் 11ஆம் தேதி பிறந்தநாளைக் கொண்டாடிய 7 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் கவலையளிக்கிறது.

சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை

உடனடியாக வழக்கைப் பதிவு செய்த நம் தமிழ்நாடு போலீஸ் சிறுமியைத் தேடுகிறார்கள், தேடுகிறார்கள், தேடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பத்து நாட்களுக்கு மேலாகத் தேடியும் சிறுமியைக் கண்டறிய முடியவில்லை. சிறுமியைக் கண்டறியும் முயற்சிகள் எந்த முன்னேற்றத்தையும் தரவில்லை. காவல்துறை செயல்பாடுகள் பலனளிக்கவில்லை. அதனால், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் புதிய கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

விசாரணை விஷயங்கள் கசிகிறது

நாடே எதிர்பார்த்து இருக்கிற இந்தச் சிறுமி வழக்கில் விசாரணை விஷயங்கள் எல்லாம் உடனுக்குடன் வெளியே கசியவிட்டு வருகிறார்கள். இதைக் காவல்துறை கசியவிடுகிறதா, இல்லை எப்படி இந்த விஷயங்கள் வெளியே வருகிறது என்று தெரியவில்லை. இப்படி செய்திகள் வெளியே கசிவது என்பது குற்றவாளிகள் தப்பிச் செல்வதற்கு வழிவகுத்துவிடாதா என்பதுதான் இங்கே கவலையாக இருக்கிறது. காவல்துறை விசாரணை ரகசியங்கள் காக்கப்படும்போதுதான் குற்றவாளி தப்பிச் செல்லாமல் இருப்பதற்கான வழிகள் ஏற்படும். ஆனால், இவர்கள் எடுக்கிற நடவடிக்கைகள் கசிவதால், அது குற்றவாளி தப்பிச் செல்வதற்கு வாய்ப்பாக அமையும். செஞ்சி சிறுமி விவகாரம் சட்டம் ஒழுங்கைக் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது. தமிழ்நாட்டில் சிறுமிக்கும் பாதுகாப்பில்லை. பாட்டிக்கும் பாதுகாப்பில்லை. யாருக்கும் இங்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், ஆனால் விஜய் அவர்கள் மட்டும் பஞ்ச் டயலாக் பேசி மக்களைப் பஞ்சராக்குவதில் சூராதி சூரராக இருக்கிறார். அண்ணன் சீர், தாய்மாமன் சீர் எனப் பெயர் மாற்றித் திட்டங்களை அறிவிக்கிறார். இதையெல்லாம் அவர்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் செய்யவில்லை. சட்டம் ஒழுங்கு, அமைதி என்பதுதான் ஒரு நாட்டிற்கு மிக மிக அவசியமானது." எனவும் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks