சென்னை கிழக்கு மாவட்டக் கழக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில், துறைமுகம் மேற்குப் பகுதியில் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி கலந்துக் கொண்டார். இந்நிக்ழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்பி கலாநிதி வீராசாமி, முன்னாள் எம்பி அப்துல்லா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி தவெகவின் இரண்டு திட்டங்களை கடுமையாக விமர்சித்தார்.

அதாவது, “ஸ்வீட் ப்ரோ (முதலமைச்சர் விஜய்) ஆட்சிக்கு வந்துள்ளார். எந்த பெண்களுக்கு அநீதி நடந்தாலும் அண்ணன் மேல இருந்து குதிச்சு வந்து நம்மளை காப்பாத்துவாருன்னு நம்பி சகோதரிகள் எல்லாரும் ஓட்டு போட்டார்கள். ஆனால் பெண்களின் பாதுகாப்புக்கு காவல்துறை அதிகாரிகள் கூட வராத சூழல் தான் உள்ளது என கதிகலங்கி நிற்கின்றனர்.

வேறு மாநிலத்தில் இருந்து வேலை தேடி வந்த ஒரு குடும்பத்தின் 5 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, ஏன் கடந்த 24 மணி நேரத்தில் 8 குற்ற சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த 4 மாத கால ஆட்சியில் 570 குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் பெரும்பாலான குற்றங்கள் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரானவை. அதில் பல குற்றங்களைச் செய்தவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். இப்படித்தான் பெண்கள் தவெக ஆட்சியில் பாதுகாக்கப் படுகிறார்கள்.

சென்னை கிழக்கு மாவட்டக் கழக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில், துறைமுகம் மேற்குப் பகுதியில் இன்று நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் திரு. @PKSekarbabu , வடசென்னை மக்களவை உறுப்பினர் திரு. @DrKalanidhiV , கழக அயலக அணி செயலாளர் திரு. @mmabdulladmk , மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமிகு. சுதா தீனதயாளன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் பங்கேற்றனர்.

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 7, 2026

இதனைத் தாண்டி பெண்கள் யார் கையையும் எதிர்பார்த்து நிற்கக்கூடாது என்பது திமுகவின் நிலைப்பாடாகும். சொத்து, கல்வி, வருமானம், சம்பாதித்து தலை நிமிர்ந்து நிற்க சொல்லிக் கொடுத்தது திமுக தான். இன்றைக்கு ஆட்சிக்கு வந்துள்ள தவெக கொண்டு வந்துள்ள இரண்டு திட்டங்களில் ஒன்று தாய்மாமன் சீர், திருமணத்திற்கு அண்ணன் சீர்வரிசை திட்டம். இவையெல்லாம் வேண்டாம். ஒரு கிராம் தங்க மோதிரத்தில் குழந்தைகளுக்கு எதுவும் கிடைத்து விடப்போவதில்லை. எல்லா மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கு போதுமான மருந்து இல்லை. குழந்தைகளுக்கு போதுமான மருத்துவர்கள் இல்லை. ஆனால் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை தங்க மோதிரம் வாங்க செலவு பண்ணிவிட்டு மருத்துவர்களை நகைக்கடையில் நிற்க வச்சிட்டு ஒரு கேடுகெட்ட ஆட்சியை தான் தவெக இன்று நடத்திக் கொண்டிருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article