இன்ஸ்டாகிராம் காதல் விபரீதம் !! இளம்பெண் விஷம் குடித்துவிட்டு, காதலன் தூக்கிட்டு தற்கொலை

இன்ஸ்டாகிராம் காதல் விபரீதம் !! இளம்பெண் விஷம் குடித்துவிட்டு, காதலன் தூக்கிட்டு தற்கொலை
News Image

"இன்ஸ்டாகிராம் மூலம் காதல்"

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு சாலை பாரதி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த் ( வயது 28 ) இவர் போஸ்டர் மற்றும் மளிகைக் கடையில் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர், இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபுலட்சுமி ( வயது 21 ) என்ற இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலுக்கு சுபுலட்சுமியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் சுபுலட்சுமி. கடந்த ஓராண்டாக வாலாஜாபேட்டையில் உள்ள பிரசாந்த் வீட்டில் இருவரும் கணவன் - மனைவியாக வசித்து வந்துள்ளனர்.

"விஷம் அருந்தி , தூக்கிட்டு தற்கொலை"

பிரசாந்துக்கு ஏற்கெனவே திருமணமாகி , கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் பிரசாந்த் - சுபுலட்சுமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சுபுலட்சுமி வீட்டில் விஷம் குடித்தும், பிரசாந்த் மற்றொரு அறையில் தூக்கிட்டும் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

நீண்ட நேரமாக வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பிரசாந்தின் தம்பி விஜய் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளே சென்று பார்த்த போது, இருவரும் உயிரிழந்து கிடந்ததைப் பார்த்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபேட்டை போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks