"கோவிலிலேயே பிரசாதம் தயாரித்து வழங்கும் முறை"

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கோவிலிலேயே பிரசாதம் தயாரித்து வழங்கும் முறையை தொடங்கி வைத்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ரமேஷ் கூறியதாவது ;

12 கோவிலில் அன்னதானம் எண்ணிக்கை அதிகப்படுத்தி விரிவுபடுத்தி உள்ளோம். கோவில்களிலே தரமாக பிரசாதம் செய்யவும் , விற்பனை செய்யவும் இன்று தொடங்கி உள்ளோம். மேலும் பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவித்தது ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். எந்தெந்த கோவில்களில் மழை நீர் பாதிக்கின்றதோ தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலைத்துறை மூலமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வந்தால் எப்படி வெளியேற்றுவது தூய்மைப்படுத்துவது என்பது குறித்து அறிவுறுத்தி உள்ளோம்.

"சேகர்பாபு கேட்டால் வீடியோ வெளியிட தயார்"

2024 ஒரு மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்ட போது அந்த சமயத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அந்தப் பழைய வீடியோவை இன்னும் அலுவலகத்தில் இருக்கிறது. அதை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கேட்டால் வெளியிட தயாராக உள்ளோம். திருவேற்காடு மாரியம்மன் கோவிலில் சில மாதங்களில் பணிகள் முடிந்த பிறகு பயன்பாட்டுக்கு வரும்.

"ஆபாசமாக பேசுவதால் கைது"

விமர்சனத்துக்காக நாங்கள் கைது செய்யவில்லை. ஆபாசமாக பேசுவதால் தான் கைது நடைபெறுகிறது. முதலமைச்சர், அமைச்சர்கள் மீது என்று பாராமல் ஆபாசமாக பேசி வருவதற்காக தான் கைது செய்துள்ளோம். விமர்சனத்திற்கு பதில் அளிக்க எந்த விதமான பிரச்சினையும் கிடையாது.

Source: Read Full Article