" வேறொருவருக்கு வைத்த குறி - ஆள்மாறி நடந்த கொடூரம் " மதுபான கடையில் நடந்த கொடூரம்

" வேறொருவருக்கு வைத்த குறி - ஆள்மாறி நடந்த கொடூரம் " மதுபான கடையில் நடந்த கொடூரம்
News Image

"கழுத்தில் கத்தியால் வெட்டு"

கிருஷ்ணகிரி சப் ஜெயில் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் ( வயது 36 ) இவர் கிருஷ்ணகிரி டவுன் பகுதியில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் , தனது நண்பர் ரமேஷ்குமாருடன் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே உள்ள தனியார் பாருக்கு இரவு மது அருந்தச் சென்றுள்ளார்.

அப்போது , அவர்களுக்கு அருகில் இருந்த மற்றொரு மேசையில் கிருஷ்ணகிரி சத்யசாய் நகரைச் சேர்ந்த நித்தீஷ், ஜக்கப்பன் நகரைச் சேர்ந்த மஞ்சு , குப்பண்ணா நகரைச் சேர்ந்த சூர்யா உள்ளிட்ட ஆறு பேர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

சிறிது நேரத்துக்குப் பிறகு , முகேஷும் அவருடன் இருந்தவரும் செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது , அருகிலிருந்தவர்கள் முகேஷின் கழுத்தின் பின்புறத்தில் கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முகேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து , அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

"விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்"

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட முகேஷுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் , கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சூர்யாவைக் கைது செய்து விசாரித்த போது , தாக்குதலில் மேலும் சிலர் ஈடுபட்டது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து , சேலம் மாவட்டம் கமலாபுரத்தைச் சேர்ந்த கவின், பன்னீர்செல்வம் மற்றும் கருப்பூரைச் சேர்ந்த மற்றொரு சூர்யா ஆகியோருக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து சேலத்துக்குச் சென்ற கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் , பன்னீர்செல்வம் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் கவின், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நித்தீஷ் மற்றும் மஞ்சு ஆகிய மூவர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சேலத்தைச் சேர்ந்த மூன்று பேர் முன்விரோதம் காரணமாக வேறொருவரைத் தாக்கத் திட்டமிட்டதாகவும் , அந்த நபரைப் போன்ற தோற்றத்தில் இருந்த முகேஷை ஆள் மாறி வெட்டியதாகவும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், சம்பவத்தின் போது செல்போனில் யாருடன் பேசிக் கொண்டிருந்தனர், தாக்குதலுக்கான உண்மையான காரணம் என்ன, இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks