இரவு உடையில் பெண் கைது: "காவல்துறை கண்ணியத்தை காக்க வேண்டும்" - ரவிக்குமார் வலியுறுத்தல்

இரவு உடையில் பெண் கைது: "காவல்துறை கண்ணியத்தை காக்க வேண்டும்" - ரவிக்குமார் வலியுறுத்தல்
News Image

விழுப்புரம்: ஒரு பெண்ணைக் கைது செய்யும்போது காவல்துறையினர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை என்றும், இரவு உடையில் அவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருது பெண்களின் கண்ணியத்துக்குக் களங்கம் ஏற்படும் வகையில் காவல்துறையினர் நடந்துகொள்ளக் கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகளில் காவல்துறையினர் உரிய நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி 2-வது அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் இணைந்து அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து எம்.பி. ரவிக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தலின் போது திண்டிவனத்தில் வெற்றி பெற்றால், திண்டிவனம் மற்றும் மரக்காணம் ஆகிய 2 இடங்களில் அலுவலகம் திறந்து மக்கள் பணியாற்றுவேன் என அமைச்சர் வன்னியரசு வாக்குறுதி அளித்தார். அதன்படி தலைவர் எழுச்சித்தமிழர் வழிகாட்டுதலில் 15 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த திண்டிவனம் சட்டமன்ற அலுவலகம் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்று 2-வது அலுவலகம் மரக்காணத்தில் திறக்கப்பட்டுள்ளது.

அமைச்சராக இருந்தாலும் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியை "திண்டிவனம் அல்ல திண்டிவளம்" ஆக்குவேன் என்று கூறியதற்கு ஏற்ப 4, 5 மாதங்களிலேயே பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மரக்காணத்தின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த அலுவலகத்தை பயன்படுத்தி தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும்.

நாதக பெண் வேட்பாளர் கைது

நாம் தமிழர் கட்சி தாராபுரம் பெண் வேட்பாளர் கைது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியலில் நாகரிகத்தை பேணுவது மிக அவசியம். எல்லை கடந்து பேசுவது கூடாது. இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். அவதூறாக பேசுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது எல்லா ஆட்சியிலும் நடக்கிறது

இருந்தாலும் அவர் கைது செய்யப்பட்ட முறை ஏற்புடையது அல்ல. ஒரு பெண்ணை கைது செய்யும்போது காவல்துறை கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை கடைபிடித்ததாக தெரியவில்லை. இரவு உடையுடன் அவர் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளார். பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் காவல்துறை நடந்துகொள்ளக்கூடாது என்றார்.

வடமாநிலத்தவர் விவகாரம்

தமிழகத்திற்கு வடமாநிலத்தவர் வருகை குறித்த கேள்விக்கு, நமது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குஜராத், மும்பை, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ளனர். அவர்களை அங்கு எதிரிகளாக பார்த்தால் நமக்கு பாதிப்பு ஏற்படும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ வழியில்லாமல் தான் புலம்பெயர்கின்றனர். அவர்களை கருணையோடு பார்க்க வேண்டும். அவர்கள் தான் குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்று. யாராக இருந்தாலும் குற்றத்தில் ஈடுபட்டால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

125 நாள் வேலைத்திட்டம்

125 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக ஒன்றிய அரசு அறிவித்தாலும், 20-25 நாட்களுக்கு மேல் வேலை கொடுக்க நிதி ஒதுக்கவில்லை. இந்த பாரபட்சத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் உள்ளிட்ட விளிம்புநிலை குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாள் வேலை வழங்க தனது நிதியில் இருந்து நிதி ஒதுக்கியுள்ளது. இது இதுவரை எந்த அரசும் செய்யாத நடவடிக்கை என்று பாராட்டினார்.

கரப்பான் பூச்சி பொம்மை எரிப்பு

டெல்லியில் கரப்பான் பூச்சி உருவ பொம்மை எரிப்பு குறித்த கேள்விக்கு, உருவ பொம்மை எரிப்பது எதிர்ப்பின் அடையாளம். கரப்பான் பூச்சி பொம்மையை எரிக்கிறார்கள் என்றால் அந்த அளவுக்கு பயப்படுகிறார்கள் என்று அர்த்தம். பா.ஜ.க. வீழ்ச்சி பாதைக்கு சென்றுவிட்டது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பிரச்சினைகளை திசை திருப்ப முடியாமல் திணறி வருகின்றனர். பா.ஜ.க. அரசு 2029 வரை கூட தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks