ஆசிய விளையாட்டு தொடரின் நிறைவு விழாவில் இந்திய வீராங்கனை நீரு தாண்டா தேசியக் கொடி ஏந்தி வலம் வந்தார்.

20-வது ஆசிய விளையாட்டு

ஜப்பானின் அய்ச்சி நகரில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கிய 20-வது ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 16 நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டு தொடரில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்தியா படைத்த முக்கிய சாதனைகள்

நடப்பு ஆசிய விளையாட்டு தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்துள்ளனர். இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகள் ஒரே தொடரில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை. மேலும், 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு இரு அணிகளும் நேரடியாக தகுதிப் பெற்றன.

வில்வித்தை போட்டியில் தனிநபர் ரீகர்வ் பிரிவில் தங்கம் வென்ற குங்குமம் மோஹோத் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

தனிநபர் கோல்ஃப் பிரிவில் பிரணவி அர்ஸ் இந்தியாவிற்காக முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ், பந்தய தூரத்தை 54.75 வினாடிகளில் கடந்து பி.டி.உஷாவின் 42 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். அதேவேளையில், தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களையும் அவர் இந்த தொடரில் கைப்பற்றினார்.

பெண்கள் ட்ராப் ஷூட்டிங் தனிநபர் பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 48 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு இந்தப் பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.

4-வது இடத்தில் இந்தியா

21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா, புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. 341 பதக்கங்களை குவித்த சீனா புள்ளிப்பட்டியலி முதல் இடத்தை பிடித்த நிலையில், ஜப்பான் மற்றும் தென் கொரியா அணிகள் முறையே 2 மற்றும் 3ஆம் இடங்களை பிடித்தது.

நிறைவு விழா

16 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆசிய விளையாட்டு தொடர் இன்று (அக்.4) பிரம்மாண்டமாக நிறைவடைந்தது. நிறைவு விழாவில் துப்பாக்கி சூடுதல் வீராங்கனை நீரு தாண்டா இந்தியா சார்பில் தேசியக் கொடியை ஏந்தி வலம் சென்றார்.

அடுத்த தொடர் எப்போது?

21-வது ஆசிய விளையாட்டு தொடர் வருகிற 2030ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள நிலையில், ஆசிய விளையாட்டு தொடரை நடத்துவதற்கான ஒலிம்பிக் கொடி கத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Source: Read Full Article