புயலால் மழை இல்லை! டெல்டா மற்றும் மலைப் பகுதிகளில் கொட்டப்போகும் அதி கனமழை! வெதர்மேன் முக்கிய அப்டேட்!

புயலால் மழை இல்லை! டெல்டா மற்றும் மலைப் பகுதிகளில் கொட்டப்போகும் அதி கனமழை! வெதர்மேன் முக்கிய அப்டேட்!
News Image

வடகிழக்கு பருவமழை தீவிரடைந்துள்ளது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மேலும் வலுப்பெற்று புயலாக மாறும். பின்னர் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 27ம் தேதி காலை தீவிர புயலாக வலுப்பெறக் கூடும். வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று மிக தீவிர புயலாக ஆந்திர கடலோர பகுதிகளை அடையக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ரெட் அலர்ட் எச்சரிக்கை

இதன் காரணமாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக நிலப்பகுதியில் நீடிக்கும் தாழ்வு பகுதியே மழைக்கு தமிழ்நாட்டில் பெய்து வரும் மழைக்கு காரணம் என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Teachers: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி வார விடுமுறை நாட்களில்! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மழை இல்லை

இதுதொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மத்திய கிழக்கு வங்ககடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இத்தாழ்வு மண்டலம் இன்றிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை புயலாக மாறக்கூடும்.

சென்னையிலிருந்து 1250 கி.மீ. தூரத்தில் வடக்கே-வடகிழக்கே காற்றழத்த தாழ்வு மண்டலம் மையம்.  இப்புயல் சின்னத்தால் தற்போது தமிழ்நாட்டில் மழை இல்லை. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரளம் கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தமிழக நிலப்பரப்பு மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோர பகுதிகளில் நிலவுகிறது.

டெல்டா மாவட்டங்களில் கனமழை

தமிழக நிலப்பகுதியில் நீடிக்கும் தாழ்வு பகுதியே மழைக்கு தமிழ்நாட்டில் பெய்து வரும் மழைக்கு காரணம். நாளை காலை வரை தமிழ்நாட்டில் பரவலாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் வடகடலோர மாவட்டங்கள், வடக்கு உள் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை வாய்ப்பு. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளில் இன்று அதித கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks