அதிர்ச்சி ; அறுவை சிகிச்சைக்குப் பின் கல்லூரி மாணவி பரிதாப மரணம்

அதிர்ச்சி ; அறுவை சிகிச்சைக்குப் பின் கல்லூரி மாணவி பரிதாப மரணம்
News Image

"தவறி விழுந்த குழந்தை - எலும்பு முறிவு"

திருப்பூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் - சசிகலா தம்பதியரின் 19 வயது மகள் சுபஸ்ரீ , சென்னையில் உள்ள அப்பல்லோ கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த போது , எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. தவறி விழுந்த குழந்தையைப் பிடிக்க முயன்ற போது சுபஸ்ரீ கீழே விழுந்ததில், அவரது இடது முழங்கைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இரண்டு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

"கடுமையான மூச்சு திணறல்"

முதலில் அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற அவர், மேல் சிகிச்சைக்காகக் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 21ஆம் தேதி மதியம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அன்றைய தினமே மாலையில் உலோகத் தகடுகள் பொருத்தப்பட்டு முழங்கைக்கான அறுவை சிகிச்சை முடிவடைந்தது. ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த சில மணி நேரங்களிலேயே , இரவு 8:30 மணி அளவில் சுபஸ்ரீக்கு திடீரென கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தியும் அவரது உடல் நிலை சீராகாததால் வென்டிலேட்டர் மற்றும் ஐசிடி போன்ற தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு , 15 நாட்களுக்கும் மேலாக அவர் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். எனினும் , நுரையீரல் சுருங்கி விரியும் தன்மையை அசுர வேகத்தில் இழந்ததால் , எக்மோ போன்ற மிக உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

"மருத்துவர்களின் தவறான சிகிச்சை"

மாணவியின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் , மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் நுரையீரல் பாதிக்கப்பட்டு சுபஸ்ரீ உயிரிழந்தார் எனக் கூறி உடலை வாங்க மறுத்துக் குரோம்பேட்டை பார்வதி மருத்துவமனை முன்பு திரண்டனர்.

மேலும் , ஜி.எஸ்.டி சாலையில் அமர்ந்து ஆவேசமாகச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது , மாணவி கீழே விழுந்த போதே அவரது மார்பு மற்றும் நுரையீரல் பகுதியில் பலவீனம் ஏற்பட்டு காயம் இருந்ததாகவும் , அதன் நோய்க் கிருமித் தீவிரத்தாலேயே மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார் என்றும் , மருத்துவமனை சார்பில் உரிய விதிமுறைகளின்படியே நிபுணர்களைக் கொண்டு முறையான சிகிச்சைகள் அனைத்தும் வழங்கப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர். மேலும், மாணவியின் உயிரிழப்பு குறித்துப் போலீசார் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks