உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர்களில் ஒருவரும், அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரருமாக திகழும் லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றார்.

5 வயதில் கால்பந்து

1987 ஆம் ஆண்டு ஜூன் 24 தேதி அர்ஜென்டினா நாட்டில் உள்ள ரொசாரியோ நகரத்தில் ஜார்ஜ் மெஸ்ஸி - செலியா குசிட்டினி தம்பதியின் 3-வது குழந்தையாக பிறந்தார் லியோனல் மெஸ்ஸி. தனது 5 வயதில் இருந்தே கால்பந்து விளையாட தொடங்கிய மெஸ்ஸி, 12 வயதில் நியுவெல்ஸ் ஒல்ட் பாய்ஸ் அணிக்காக விளையாடி சுமார் 500 கோல்களை அடித்து அசத்தினார். தொடர்ந்து, சிறுவயதிலேயே லியோனல் மெஸ்ஸிக்கு வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது. ஆனால், அதற்கான மருத்துவச் செலவை (மாதம் 900 டாலர்கள்) ஏற்றுக்கொள்ள அர்ஜென்டினாவில் உள்ள அவரது உள்ளூர் கிளப் முன்வரவில்லை.

பார்சிலோனா அணியில் தஞ்சம்

மெஸ்ஸியின் திறமையை கண்ட பார்சிலோனா அணியின் அப்போதைய விளையாட்டு இயக்குனர் கார்லஸ் ரெக்சாக் அவரை அணியில் சேர்த்துக் கொள்வதோடு, அவரது மருத்துவ செலவையும் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார். இதன் காரணமாக 2000ஆம் ஆண்டு மெஸ்ஸியும் அவரது குடும்பத்தாரும் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகருக்கு குடிபெயர்ந்தனர். முதலில், 14 வயதுக்குட்பட்ட பார்சிலோனா அணியின் இளையோர் பிரிவில் ஆடத் தொடங்கிய மெஸ்ஸி, 2004ஆம் ஆண்டு பார்சிலோனா முதன்மை அணிக்காக அதிகாரப்பூர்வ போட்டியில் களமிறங்கினார்.

முடிவுக்கு வந்த பந்தம்

இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு பார்சிலோனா அணி கடுமையான பொருளாதார இழப்புகளைச் சந்தித்தது. இதனால், அணியின் ஒட்டுமொத்த ஊதியச் செலவைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஸ்பானிஷ் கால்பந்து லீக்கின் (லா லிகா) 'ஃபேர் ப்ளே' (Fair Play) நிதி வரம்பு விதிகளின்படி, கிளப்பின் வருமானத்திற்கு மீறி ஊதியம் வழங்கக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. இதையடுத்து, மெஸ்ஸி தனது ஊதியத்தில் 50 சதவீதத்தை குறைக்கத் தயாராக இருந்தபோதும், கிளப்பின் அப்போதைய நிதி நிலைமை மற்றும் லா லிகாவின் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் புதிய ஒப்பந்தத்தை பதிவு செய்ய பார்சிலோனா நிர்வாகத்தால் இயலாமல் போனது. இதனால், லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறினார். சுமார் 17 ஆண்டுகள் பார்சிலோனா அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி பல கோல்களை அடித்து அசத்திய லியோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து ஜாம்பவானாகவும் உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பார்சிலோனா அணிக்காக அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம்.

சர்வதேச அறிமுகம்

2005ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்காக சர்வதேச கால்பந்து போட்டிகளில் அறிமுகமானார் லியோனல் மெஸ்ஸி. 2006ஆம் ஆண்டு குரோவாசியா அணிக்கு எதிரான நட்புரீதியான ஆட்டத்தில் மெஸ்ஸி தனது முதல் சர்வதேச கோலை பதிவு செய்தார். அதன்பின், 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் கோபா அமெரிக்கா தொடர்களில் அடைந்த தோல்விகளால் மனவேதனை அடைந்த மெஸ்ஸி, 2016ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விலகினார்.

மறுபிரேவசம்

2021ஆம் ஆண்டில் மீண்டும் சர்வதேச அணிக்கு திரும்பிய மெஸ்ஸிக்கு அவரது கால்பந்து வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஆண்டாக அது அமைந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற கோபா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரேசில் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணிக்கு பட்டத்தை பெற்று தந்தார். அதைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணியை சாம்பியன் பட்டம் வெல்ல் வைத்து தனது பல ஆண்டுகால கனவை நிறைவேற்றிக் கொண்டார். மீண்டும், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்கா தொடரிலும் அர்ஜென்டினா அணியை வெற்றி பெற செய்தார்.

மெஸ்ஸி நிகழ்த்திய சாதனைகள்

அர்ஜென்டினா அணிக்காக 125-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி 200-க்கும் மேற்பட்ட சர்வதேச கோல்களை பதிவு செய்துள்ளார். அதேபோல் லா லிகா தொடரில் பார்சிலோ அணிக்காக அதிகப்பட்சமாக 474 கோல்களை அவர் அடித்துள்ளார். அதிலும், 2011-12-வது சீசனில் பார்சிலோனா அணிக்காக 73 கோல்களை அடித்து சாதனை படைத்தார். இதன்மூலம், தனது ஒட்டுமொத்த கால்பந்து பயணத்தில் லியோனல் மெஸ்ஸி 900-க்கும் மேற்பட்ட கோல்களை பதிவு செய்துள்ளார். மேலும், பிஃபா சிறந்த வீரர் விருதை 3 முறையும், பிஃபா கோல்டன் பால் விருதை 2 முறையும் மெஸ்ஸி வென்றுள்ளார்.

ஜாம்பவான் மெஸ்ஸி

5 வயதில் கால்பந்து விளையாட தொடங்கிய மெஸ்ஸி தனது கடின உழைப்பு மற்றும் திறமையால் படிப்படியாக உயர்ந்து இன்று கால்பந்து உலகின் ஜாம்பவானாக திகழ்கிறார். தொழில்முறை மற்றும் சர்வதேச போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய மெஸ்ஸி, உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் என்று சொன்னால் மிகையாகாது. மெஸ்ஸி என்ற பெயரை கேட்டாலே ஒவ்வொரு கால்பந்து ரசிகரும் உற்சாகமடையும் அளவிற்கு அவர் தனது திறமையால் பலரது மனைதையும் கவர்ந்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் ஓய்வு

நடப்பாண்டு பிஃபா உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா தோல்வியடைந்த நிலையில், ”நான் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இனி கொடுக்க என்னிடம் எதுவும் இல்லை” என்ற உணர்வுபூர்வமான வார்த்தகளுடன் மெஸ்ஸி தனது சர்வதேச ஓய்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, நேற்று (அக்.6) பெனின் அணியுடன் நடைபெற்ற நட்புரீதியிலான போட்டியுடன் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் லியோனல் மெஸ்ஸி.

உண்ர்ச்சிப்பூர்வமான தருணம்

தனது கடைசி போட்டியில் விளையாடிய லியோனல் மெஸ்ஸிக்கு பியூனஸ் அயர்ஸில் உள்ள மானுமென்டல் மைதானத்தில் பிரம்மாண்டமான பிரியாவிடை அளிக்கப்பட்டது. தனது 3 மகன்களுடன் மைதானத்திற்குள் நுழைந்த மெஸ்ஸி, ரசிகர்களின் ஆரவாரத்தை கண்டு உணர்ச்சிவசப்பட்டார். மேலும், தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அவரது கண்களில் கண்ணீர் பெருகியது. அப்போது, மெஸ்ஸியின் 10-ஆம் எண் ஜெர்சியை குறிக்கும் வகையில் 10-வது நிமிடத்தில் ஆட்டம் சில நொடிகள் நிறுத்தப்பட்ட நிலையில், 85,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் நீண்ட நேரம் கைதட்டி மெஸ்ஸிக்கு தங்களது மரியாதையை செலுத்தினர். 21 ஆண்டுகாலம் சர்வதேச கால்பந்து உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த லியோனல் மெஸ்ஸியின் பயணம் ரசிகர்களின் ஆரவார உற்சாகம் மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களுடன் முடிவுக்கு வந்தது.

இனி எங்கு பார்க்கலாம்?

சர்வதேச கால்பந்து உலகில் இருந்து மெஸ்ஸி ஒய்வு பெற்றாலும், மேஜர் லீக் சாக்கர் தொடரில் அவர் இண்டர் மியாமி அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்னதான் சர்வதேச போட்டிகளில் அவரை காண முடியாமல் போனாலும், தொழில்முறை போட்டிகளில் பார்க்கலாம் என்ற நம்பிக்கையால் ரசிகர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Source: Read Full Article