தாம்பரம் மாநகராட்சியில் சுமார் ரூ.45.90 லட்சம் மதிப்புள்ள 2 திட்ட பணிகள் அதற்கான அதிகாரப்பூர்வ டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்படுவதற்கு முன்பாகவே, திறப்பு விழா நடத்தப்பட்டதாக அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் விடுவிக்கப்பட்டு கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரிய விநியோக பிரிவின் இணை இயக்குனராக பாலச்சந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தொட்டவனை விட மாட்டேன் என்று சொல்வது இதுதானா?? என கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலச்சந்தர் ஐஏஎஸ்

இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பாலச்சந்தர் IAS அவர்களை தமிழ்நாடு மின்சார வாரிய விநியோக பிரிவின் இணை இயக்குனராக நியமித்ததை அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்ட ஒரு IAS அதிகாரியை பணியிடை நீக்கமாவது செய்திருக்க வேண்டும். டெண்டர் செட்டிங் செய்து, சிலைகளை நிறுவிய பிறகு அதற்கு டெண்டர் போட்ட அதிகாரியான பாலச்சந்தர் ஐஏஎஸ் ஏற்கனவே சீரழிந்த நிலையில் இருக்கக்கூடிய மின்சார வாரியத்தில் என்ன செய்வார்?? முதலமைச்சர் விஜய் அவர்கள் தொட்டவனை விட மாட்டேன் என்று சொல்வது இதுதானா?? அறப்போரின் தாம்பரம் மாநகராட்சி புகாரின் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன??

இதையும் படிங்க: ரூ.40 கோடியில் ஹெலிகாப்டர்! தந்தைக்கு திமுக எம்.எல்.ஏ கொடுத்த பிரம்மாண்ட பிறந்தநாள் பரிசு! யார் இந்த கதிரவன்!

ஏற்கனவே மின்மாற்றி (transformer) ஊழலில் மற்றும் மின்கடத்தி (conductor)ஊழலில் விசாரிக்கப்படும் ராஜேஷ் லக்கானி IAS அவர்களை அதே மின்சார வாரியத்தின் இயக்குனராக நியமித்ததன் மூலமாக இந்த ஊழல்களின் மீதான நடவடிக்கையில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை நாம் இழந்து வருகிறோம்.

ஊழலில் சீரழியும் மின்சார வாரியம்

தற்பொழுது அறப்போர் வெளியிட்ட தாம்பரம் மாநகராட்சி முறைகேட்டின் டெண்டர் அதிகாரியான அப்போதைய தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS அவர்களை மின்சார வாரியத்தில் இணை இயக்குனராக நியமித்ததன் மூலமாக இனி மின்சார வாரியம் மேலும் ஊழலில் சீரழிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அறப்போர் இயக்கம்

அரசின் இந்த நியமனங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் அவர்களும் மற்றும் துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்களும் என்ன விளக்கம் சொல்வார்கள்?? இரு நியமனங்களும் மின்சார வாரியத்தை மேலும் சீரமைக்குமா? அல்லது மேலும் சீரழிக்குமா? Justice must not only be done, but must also be seen to be done என்பதை முதல்வர் விஜய் அவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். இந்த இரு நியமனங்களையும் உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கோருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article