பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?

பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
News Image

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டம் கஞ்ச்பசோடாவை சேர்ந்த பிரபுலால் குப்தா எனும் 65 வயது முதியவர் காயத்ரி நகரில் உள்ள  வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். குட்கா பயன்படுத்தும் பழக்கம் கொண்ட பிரபுலால் குப்தா, மதிய வேளையில் மூன்றாவது மாடியின் பால்கனியில் இருந்து குட்காவை
மென்று துப்பியுள்ளார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்தது எப்படி?

பிரபுலால் குப்தா துப்பிய எச்சிலானது பால்கனியை ஒட்டிச்சென்ற 11KV உயரழுத்த மின்கம்பியின் மீது தொடர்ச்சியாக பட்டநிலையில் அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. குடியிருப்புகளுக்கு அருகே உயரழுத்த மின் கம்பிகள் செல்வது குறித்து பலமுறை புகாரளித்தும் மின் துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதிகள் மக்கள் இச்சம்பவத்தை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளனர்.

மின்கடத்தியாக செயல்பட்ட உமிழ்நீர்

11KV போன்ற உயரழுத்த மின் கம்பியின் அருகே ஏதேனும் ஈரப்பதமோ அல்லது கடத்தியோ இருக்குமானால் அதன்வழியாக மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. இந்நிலையில் மனித உமிழ்நீர் அதாவது எச்சிலில் ஈரப்பதத்துடன் உப்புக்களும் இருப்பதால் அதிக மின்கடத்தும் திறன் செயல்பட்டு அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து முதியவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க குடியிருப்புக்களை ஒட்டி மின்சாரக்கம்பிகள் அமைக்கப்படுவதை அரசு தடுக்க வேண்டுமென்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks