மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி மக்களை பார்க்காமல் துபாய்க்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை தமிழக வெற்றிக் கழகம் ஐடி விங் கடுமையாக சாடியுள்ளது.

சென்னையில் கனமழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் நேற்றிரவு திடீரென எதிர்பாராத அளவு கனமழை கொட்டி தீர்த்தது. மேகவெடிப்பு போன்ற அளவுக்கு மழைப்பொழிவு இருந்ததால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்து போய் விட்டது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்றும் கனமழைக்கான எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் சென்னையில் மாநில அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் இரவு முழுவதும் பம்பரமாக சுழன்றி பணி செய்து மழைநீர் தேங்காமல் மக்களின் அவதியை குறைத்தனர். தாழ்வான இடங்களில் சிக்கிய மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தனர். இப்படியான நிலையில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று துபாய்க்கு பயணம் மேற்கொண்டார். விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனிடையே உதயநிதியின் துபாய் பயணத்தை தவெக கடுமையாக விமர்சித்துள்ளது.

மக்களை நேரில் பார்க்காமல் துபாய்க்கு ஓட்டம்

இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் அதி கனமழை பொழிந்துள்ளது. தனது தொகுதியான திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் மக்களை நேரில் சென்று பார்க்காமல், பண்ணையார் வீட்டு மகன் ரீபோஸ்ட்நிதி துபாய் பயணம் மேற்கொள்கிறார். சட்டமன்றத்தில் தனது தொகுதி மக்களுக்காகப் பேசத் துப்புக்கெட்டு ஓட்டமெடுக்கிறார் என்றால், இப்போதும் ஓட்டமெடுக்கிறார் ஓட்டநிதி!

ஆபாசநிதியோ உல்லாசப் பயணம் செல்ல, ஆபாசநிதியின் ஆஸ்தான அடிவருடியின் உத்தரவின்படி, தலைமுறை தலைமுறையாக வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஓட்டநிதியின் பழைய காணொளியை எடுத்து, அவர் தொகுதிக்குச் சென்றதாகப் பரப்பி வருகின்றனர். இப்படிப் பொய்த் தகவல்களைப் பரப்பி அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு யோசனை சொல்லிவிட்டு, அடுத்தவர்கள் தகவலைச் சரிபார்க்கவில்லை எனக் கோமாளித்தனம் செய்யும் சர்க்கஸ் கூடாரம்தான் திமுக!

இரவு முழுவதும் தவெக அரசு செயல்படவில்லை என ஒப்பாரி வைத்து ஓலமிட்ட ஓட்டநிதியின் துப்புக்கெட்ட வன்முறை கூட்டத்தினர், காலையில் மழைநீர் வடிந்ததற்குத் திமுகதான் காரணம் என வெட்கங்கெட்டுத் தங்களது டம்மி டாடியின் வழியில் தப்பாமல் பெருமையை திருடுவதை செய்கின்றனர்.

ஒருபுறம் பொறை போட்டு வளர்க்கும் Generational Abusers Credit Stealing செய்ய, மறுபுறம் ஓட்டநிதி துபாய்க்கு ஓட, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் ஸ்வீட் அங்கிள். நன்றாக ஓய்வெடுங்கள் அங்கிள்” என தவெக ஐடி விங் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

Source: Read Full Article