தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
News Image

வார இறுதி நாட்கள், முகூர்த்தம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

23/10/2026 (வெள்ளிக்கிழமை), 24/10/2026 (சனிக்கிழமை), 25/10/2026 (ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தம் மற்றும் பௌர்ணமி) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 23/10/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 775 பேருந்துகளும், 24/10/2026 (சனிக்கிழமை) அன்று 485 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து

சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23/10/2026 வெள்ளிக்கிழமை அன்று 95 பேருந்துகளும், 24/10/2026 சனிக்கிழமை அன்று 85 பேருந்துகளும், 25/10/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று திருவண்ணாமலைக்கு 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 25/10/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 805 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 12884 பயணிகளும், சனிக்கிழமை அன்று 9086 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 16922 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அடையாறில் இருந்து தீபாவளி சிறப்பு பேருந்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 05/11/26 முதல் 07/11/26 வரை சென்னை அடையாறில் இருந்து திருச்சி , மதுரை, கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கு SETC சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

நேரம்

சென்னை அடையாறு  - திருச்சி

07.30 pm ( AC Seater )

சென்னை அடையாறு - மதுரை

06.00 pm ( AC Lower Berth Seater )

சென்னை அடையாறு - கன்னியாகுமரி

06.00 pm ( Ultra Deluxe )

இனையதள முன்பதிவு முகவரி: www.tnstc.in

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks