"ரீல்ஸ் எடுப்பதை நிறுத்துங்க" - ஒரே நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை, அடுத்து என்ன செய்யப்போறீங்க? - டிடிவி தினகரன் தாக்கு

"ரீல்ஸ் எடுப்பதை நிறுத்துங்க" - ஒரே நாள் மழைக்கே தத்தளிக்கும் சென்னை, அடுத்து என்ன செய்யப்போறீங்க? - டிடிவி தினகரன் தாக்கு
News Image

ஒரு நாள் இரவு மழைக்கே சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அடுத்தடுத்த மழைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க என்ன செய்யப் போகிறது தவெக அரசு? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த தொடர் கனமழையால் குடியிருப்புகளும் சாலைகளும் வெள்ளக்காடாக மாறியிருப்பதும், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதும் சென்னை மாநகராட்சி மற்றும் தவெக அரசின் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தத்தளிக்கும் சென்னை

சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தும், மழைநீர் தேங்குவதைத் தடுக்கவும், தேங்கியிருக்கும் மழைநீர் தடையின்றி வெளியேறுவதை உறுதி செய்யவும் உரிய நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவாகவே, ஒருநாள் இரவு மழைக்கே சென்னை மாநகரமே முழுமையாகத் தத்தளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கண்காணிப்புப் பணிக்காக நியமித்ததோடு தன் கடமை முடிந்துவிட்டதாகக் கருதும் முதலமைச்சர் ஜோசப் விஜய், களப்பணிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுமே பொதுமக்களை மழை பாதிப்புகளிலிருந்து காக்கும் என்பதை இனியாவது உணர வேண்டும்.

ரீல்ஸ் எடுப்பதை ஓரங்கட்டிவிட்டு

எனவே, மழைநீர் வடிகால் ஆய்வு என்ற பெயரில் கேமராக்கள் முன் தோன்றி ரீல்ஸ் எடுப்பதை ஓரங்கட்டிவிட்டு, களப்பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, மழைநீர் தேங்கும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அடுத்தடுத்த நாட்களில் எதிர்பார்க்கப்படும் பெருமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் முன்னெடுத்திட வேண்டும் என சென்னை மாநகராட்சியையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks