தமிழ்நாட்டில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளிங் ஒன்று ஆயுதபூஜை, விஜயதசமி. செய்யும் தொழிலையும், கல்வியையும் கொண்டாடும் இந்த பண்டிகையை தமிழ்நாட்டில் மக்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆயுதபூஜை, விஜயதசமி:

நடப்பாண்டிற்கான ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வரும் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி கொண்டாட்டத்திற்காக காய்கறிகள், பழங்கள், பொறி விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. பொதுவாக ஆயுதபூஜை வீடுகள் மட்டுமின்றி ஒவ்வொரு தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்களில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

காய்கறிகள், பழங்கள் விற்பனை ஜோர்:

வழக்கத்தை விட காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோராக நடக்கும் என்பதால் சந்தைகளுக்கு வழக்கத்தை விட அதிகளவு இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தைக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து காய்கறிகளும், பழங்களும், வாழை இலைகளும் பல மடங்கு அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொரி விற்பனை படுஜோராக நடக்கும் என்பதால் பொரி இறக்குமதியும் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளது. மழைக்காலமாக இருந்தாலும் இதன் தாக்கம் பெரியளவு வியாபாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வீடுகளில் சாமி தரிசனம் செய்வது மட்டுமின்றி தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்களும் சாமி தரிசனம் செய்வதற்காக பொரி மற்றும் இனிப்புகள் வாங்கி வருவதால் இதன் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

கோயில்களிலும் சிறப்பு தரிசனம்:

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு தரிசனத்திற்காக பொதுமக்கள் குவிவார்கள் என்பதால் பக்தர்கள் அதிகம் குவியும் கோயில்களிலும் சிறப்பு தரிசனத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, திருச்செந்தூர் போன்ற பக்தர்கள் அதிகம் குவியும் கோயில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

பூக்கள் விற்பனையும் அதிகரிப்பு:

பூக்கள் விற்பனை வழக்கத்தை விட அதிகளவு இருக்கும் என்பதால் தோவாளை பூ சந்தை, மதுரை பூ சந்தை போன்ற தமிழ்நாட்டின் பிரபலமான பூ மார்க்கெட்டுகளில் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிறிய வாழை மரம், மா இலை தோரணங்களின் விற்பனையும் சிறப்பாக நடந்து வருகிறது.

பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால் மாணவர் சேர்க்கைக்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை முதல் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வரும் நிலையில், இன்றும் நாளையும் வெளியூர் செல்பவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கருதப்படுகிறது.

Source: Read Full Article