லீவு முடிஞ்சு.. விட்ரா வண்டிய சென்னைக்கு..! தலைநகருக்கு மீண்டும் படையெடுக்கும் மக்கள்!

லீவு முடிஞ்சு.. விட்ரா வண்டிய சென்னைக்கு..! தலைநகருக்கு மீண்டும் படையெடுக்கும் மக்கள்!
News Image

தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று ஆயுத பூஜை, விஜயதசமி ஆகும். வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜை செய்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் ஆகும். பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையாக வருவதால் வெளியூரில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம் ஆகும்.

முடிகிறது தொடர் விடுமுறை:

நடப்பாண்டில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நேற்றும், இன்றும் கொண்டாடப்படுகிறது. திங்கள், செவ்வாயில் விடுமுறை வந்த காரணத்தால் கடந்த வார வியாழக்கிழமை இரவு முதலே பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கினர். சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்:

தொடர் விடுமுறை இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் நேற்று இரவு முதலே சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு படையெடுக்கத் தொடங்கி வருகின்றனர். சென்னையைப் பொருத்தமட்டில் சுமார் 5 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

சிறப்பு பேருந்துகள்:

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக சுமார் 9 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை மட்டுமின்றி கோவை, திருப்பூர் ஆகிய மாநகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பேருந்துகளில் பயணம் செய்வதற்காக முன்பதிவு ஏற்கனவே மிகப்பெரிய அளவில் நடைபெற்றுள்ளது. அரசுப் பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பேருந்துகள் மட்டுமின்றி தென்மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல்:

சென்னைக்கு நேற்று இரவு முதல் படையெடுக்கும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் பரனூர், சிங்கம்பெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், வெளியூர்களில் இருந்து சென்னை வருபவர்கள் சிரமம் இல்லாமல் வருவதற்கும்,  சென்னை நகரில் பயணிப்பவர்கள் சிரமப்படாமல் இருப்பதற்கும் ஏதுவான ஏற்பாடுகளை போக்குவரத்து துறை மேற்கொண்டுள்ளது.

சமீபகாலமாக பேருந்துகள், ரயில்கள் மட்டுமின்றி விமானங்களில் இதுபோன்ற தொடர் விடுமுறைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைக்கும் வெளியூர்களுக்கு விமானங்களில் செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், விமான நிறுவனங்களும் தங்களது கட்டணங்களை உயர்த்தியுள்ளது.

தொடர் விடுமுறை முடிந்து பள்ளிகளும் திறப்பிற்கு தயாராக இருப்பதால் வெளியூருக்கு குடும்பத்தினருடன் சென்றவர்களும் அவரவர் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks