மதுரை கள்ளழகர் கோயிலில் தமிழ் பெயர் நீக்கமா? - கொதித்தெழுந்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்!

மதுரை கள்ளழகர் கோயிலில் தமிழ் பெயர் நீக்கமா? - கொதித்தெழுந்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்!
News Image

மதுரையில் புகழ்பெற்ற கள்ளழகர் கோயிலின் பெயர் பலகையில் தமிழ் நீக்கப்பட்டதாக பொய் செய்தி வெளியிட்டவர்களை அமைச்சர் ரமேஷ் கடுமையாக சாடியுள்ளார்.

மதுரை மாநகரிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் அழகர்மலை அடிவாரத்தில் கள்ளழகர் கோயில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற வைணவத்தலங்களில் ஒன்றான இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் நேற்று சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலானது. அதாவது கள்ளழகர் கோயில் வாயிலில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தி எழுத்து இடம்பெறும் பொருட்டு தமிழ் மொழி நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த போட்டோ உண்மையா, பொய்யா என தெரியாமல் பலரும் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் இந்த போட்டோ போலி என தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டதாக வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலியான செய்தியும் ஆகும். ஊடகத்தில் செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தில், பெயர்ப்பலகையில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துகளை திட்டமிட்டு ஃபோட்டோஷாப் மூலம் மறைத்து, தமிழ் நீக்கப்பட்டதைப் போன்ற ஒரு போலியான புகைப்படத்தை உருவாக்கி, அதனை உண்மையான புகைப்படம் போல சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலின் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கடந்த ஆண்டுகளில் எப்படி பெயர் பலகை இருந்ததோ இப்போதும் அதே முறையில் தான் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகிறேன்.  இந்த செய்தி வடிகட்டிய பொய் மற்றும் முழுமையாக உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துகிறோம்.

செய்தி ஊடகம் என்ற பொறுப்பான தளத்தை பயன்படுத்தி திட்டமிட்டு உண்மையை மாற்றி சித்தரித்து செய்தி வெளியிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், அரசாங்கத்தின் மீதும் இந்து சமய அறநிலையத்துறையின் மீதும் மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது.

பொய்யான புகைப்படத்தை உருவாக்கி, அதனை அடிப்படையாகக் கொண்டு போலியான செய்தியை பரப்பிய இந்த செயலுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதுபோன்ற பொய்யான மற்றும் தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்களின் மீது, சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை நிச்சயமாக மேற்கொள்ளப்படும்.பொதுமக்கள் இதுபோன்ற போலி செய்திகளையும், உண்மையை திரித்து வெளியிடும் செய்தி நிறுவனங்களையும் நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை நிச்சயமாக செய்யும்” என கூறியுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks