தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் என்ற பெயரில் சட்டவிரோதமாகப் பணம் வசூலிப்பதாகக் கூறி, அதற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கு.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கரூரைச் சேர்ந்த மலைக்கொளுந்தன் தாக்கல் செய்த மனுவில், 2026–2027 கல்வியாண்டு முதல் வினாத்தாள் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்பட்டிருந்தாலும், முந்தைய ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட தொகைகள் முறையாகக் கணக்கிடப்பட்டு, உரிய நோக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, கட்டணம் வசூலிக்கப்பட்ட விவரங்களை ஆய்வு செய்து, உரிய ரசீதுகள் மற்றும் கணக்குப் பதிவுகள் பராமரிக்கப்பட்டனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

வசூலிக்கப்பட்ட தொகைகளில் முறைகேடு

அரசுப் பள்ளி மாணவர்களிடம் அனுமதியின்றி கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட தொகைகளில் முறைகேடு உறுதி செய்யப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவும், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. மேலும், மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்க கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Source: Read Full Article