தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நிகழ்ந்து வருகிறது. தவெக கட்சி தொடங்கப்பட்டது முதலே விஜய் தவெக- திமுக இடையே மட்டுமே போட்டி என்று வெளிப்படையாக அறிவித்தார்.

அவதூறு அரசியல்:

விஜய்யின் இந்த அறிவிப்பிற்கு பிறகு திமுக மற்றும் தவெக இடையேயான போட்டி மிகப்பெரிய அளவில் உருவெடுத்தது. குறிப்பாக, இணையத்தில் திமுக தவெக மோதல்கள் மிகப்பெரிய அளவில் வெடித்தது. சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பிறகு கடந்த 4 மாதத்தில் இரு தரப்பினரும் இணையத்தில் நடக்கும் தாக்குதல்களும், ஒருமையில் விமர்சிப்பதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஒருமையிலும் இழிவாகவும் பேசிய திமுக நிர்வாகி:

குறிப்பாக, திமுக-வின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் பொது மேடைகளில் விஜய்யை மிகவும் அவதூறாக பேசுவது அவர்களுக்கே பின்னடைவை உண்டாக்கி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் நடந்த திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் எம்பி கனிமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு என பலரும் பங்கேற்ற நிலையில் விழா மேடையில் பேசிய திமுக நிர்வாகி ஒருவர் முதலமைச்சரை ஒருமையில் பேசியதுடன் மிகவும் தரக்குறைவாக அவதூறாக பேசினார்.

விழுந்து விழுந்து சிரித்த மேயர் பிரியா:

மு.க.ஸ்டாலினை பாராட்டி பேசியதுடன் விஜய்யை மிக மிகத் தரக்குறைவாக பேசினார். முதலமைச்சரை அவதூறாக பேசியதுடன் அமைச்சர்களையும் மிகவும் இழிவாக பேசினார். அவரது பேச்சைக் கேட்ட மேயர் பிரியா மேடையிலே விழுந்து விழுந்து சிரித்தார். அவரது பேச்சைக் கேட்ட முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவும் ரசித்து சிரித்தார்.

முகம் சுழித்த கனிமொழி:

திமுக பெண் நிர்வாகி ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதைக் கேட்ட கனிமொழி அதிர்ச்சியில் உறைந்ததுடன் முகம் சுழித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்வின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திமுக-வினர் தொடர்ந்து ஆபாசமாக பேசுகின்றனர் என்று இணையத்தில் குற்றச்சாட்டை முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள், தவெக நிர்வாகிகள் முன்வைத்து வருகின்றனர்.

குவியும் கண்டனங்கள்:

அதற்கேற்பார் போல, தற்போது திமுக பெண் நிர்வாகி இவ்வாறு பேசியிருக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேடையில் முதலமைச்சர் விஜய்யையும், அமைச்சர்களையும் ஒருமையிலும், இழிவாகவும் பேசிய அந்த திமுக பெண் நிர்வாகிக்கும், அதைக் கேட்டு ரசித்து சிரித்த மேயர் பிரியாவிற்கும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

தொடர்ந்து திமுக மீது ஆபாசமாக பேசுகின்றனர் என்ற குற்றச்சாட்டை தவெக முன்வைத்து வரும் நிலையில் தொடர்ந்து இதுபோன்ற விவகாரங்கள் வீடியோக்களுடன் வெளி வருவது திமுக-வினருக்கு பின்னடைவை உண்டாக்கி வருகிறது.

Source: Read Full Article