" இறந்த பெண் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி " நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

" இறந்த பெண் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி " நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
News Image

" போலியாக அதிகார பத்திரம் "

சென்னை எண்ணுார் ஜோதி நகரை சேர்ந்தவர் அனுசுயா. இவர் 1972 செப்டம்பர் 29 ம் தேதி , எர்ணாவூரில் 2,400 சதுர அடி காலி வீட்டுமனை வாங்கியுள்ளார். 2012 ஜனவரி 31 - ல் அனுசுயா உயிரிழந்த பின் , அவரது மகன் சுரேஷ், மகள் ஸ்ரீவித்யா ஆகியோர் நிலத்திற்கு சட்டப்பூர்வ வாரிசுகளாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் , திருவொற்றியூர் டி.கே.எஸ்., நகரைச் சேர்ந்த பிரேம்குமார் ( வயது 45 ) இறந்த அனுசுயாவின் பெயருடைய மற்றொரு பெண்ணை ஆள் மாறாட்டம் செய்ய வைத்து , போலி வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி , 2015 மே 6 - ம் தேதி அதிகார பத்திரம் தயாரித்துள்ளார்.

"600 ச.அடி பெயர் மாற்றம்"

அதை பயன்படுத்தி, 2015 செப்டம்பரில் அனுசுயாவின் நிலத்தில் , 600 சதுர அடியை தனது மனைவி ஜீவிதா , 40, பெயருக்கு மாற்றி , அந்த இடத்தை 4 லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார். தொடர்ந்து 2015 நவம்பரில் கூடுதலாக 600 சதுர அடி நிலத்தை மீண்டும் பெயர் மாற்றி, 3.50 லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார். இது குறித்து அறிந்த அனுசுயாவின் குடும்பத்தினர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார், பிரேம்குமார், ஜீவிதா, ஆள்மாறாட்டம் செய்த அனுசுயா மற்றும் பத்திரம் தயாரிக்க சாட்சியாக இருந்த சூர்யா சங்கர், பிரபாகரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு எழும்பூர், 28 - வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் தொடர்புடைய பிரபாகரன் உயிரிழந்தார். ஆள் மாறாட்டம் செய்த அனுசுயா தலைமறைவானதால் , அவர் மீதான வழக்கு தனியாக நடந்து வந்தது. பிரேம்குார், ஜீவிதா உட்பட மூவர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன் பிறப்பித்த உத்தரவில் ,

கடந்த 2012 - ல் உயிரிழந்த பெண்ணின் பெயரில், மூன்று ஆண்டுகளுக்கு பின் போலி அதிகார பத்திரம் தயாரித்து, நில மோசடி செய்யப்பட்டிருப்பது அரசு தரப்பு ஆவணங்கள் வாயிலாக உறுதி செய்யப்படுகிறது. சூர்யா சங்கர் மற்றும் ஜீவிதா மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லாததால், அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். முதன்மை குற்றவாளியான பிரேம்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 39,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks