மாத்திரை கவரில் இந்தி.. திமுகவின் அப்பட்டமான பித்தலாட்டம்.. மொழி பிழைப்பு... சாடிய அமைச்சர் அருண்ராஜ்!

மாத்திரை கவரில் இந்தி.. திமுகவின் அப்பட்டமான பித்தலாட்டம்.. மொழி பிழைப்பு... சாடிய அமைச்சர் அருண்ராஜ்!
News Image

கரூர், கோவை அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட மாத்திரை கவரில் இந்தி மொழி இடம்பெற்றது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், திமுகவை கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எதற்கெடுத்தாலும் மொழியை வைத்து மலிவான அரசியல் பிழைப்பு நடத்தும் திமுகவினர், தற்போது கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாத்திரை உறைகளைக் கையில் எடுத்து, தாங்கள் செய்த வரலாற்றுப் பிழையை மறைத்து இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி முதலைக்கண்ணீர் வடிப்பதற்கு எங்கள் கடும் கண்டனங்கள்!

உண்மையை அடியோடு மறைத்து, மக்கள் மத்தியில் திட்டமிட்டுப் பொய்க் குழப்பத்தை ஏற்படுத்தத் துடிக்கும் திமுகவினருக்கும், தமிழக மக்களுக்கும் இந்த விவகாரத்தின் அப்பட்டமான உண்மை நிலையைத்  தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது.

உண்மை நிலை இதுதான்

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்கள் பொதுவாக மத்திய சிறையில் இருந்து பெறப்பட்டு, அதில் 'காலை / மதியம் / இரவு' போன்ற குறிப்புகள் தமிழ் மொழியில் மட்டுமே முத்திரையிடப்பட்டு வழங்கப்படுவது வழக்கம்.

கடந்த டிசம்பர் 2025ல்  மத்திய சிறையிலிருந்து வரும் கவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஈரோடு மாவட்ட அச்சக தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் 4 லட்சம் கவர்கள் அச்சிட கடந்த திமுக ஆட்சியில் டிசம்பர் 31, 2025 அன்று அவசர ஆணை வழங்கப்பட்டு, அந்த கவர்கள் 2026 ஜனவரி மாதத்திலேயே (திமுக ஆட்சிக் காலத்திலேயே) மக்களிடம் புழக்கத்திற்கு வந்துவிட்டன.

அதேபோல் கோவையில் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அதாவது  திமுக ஆட்சியில்தான் அலுவலக நடைமுறையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு, சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் மூலம் அச்சிடப்பட்டு நடைமுறைக்கே கொண்டு வரப்பட்டது! தங்கள் ஆட்சியிலேயே இந்தியை அனுமதித்து, அதற்கான டெம்பிளேட் உருவாக்கி, நோயாளிகளிடமும் புழக்கத்திற்கு விட்டுவிட்டு, இப்போது ஆளுங்கட்சி மீது பழிபோடுவது எந்த வகையிலான அரசியல்?

தங்கள் ஆட்சியிலேயே இவை புழக்கத்திற்கு வந்தபோது வாய்மூடி, கைகட்டி மௌனியாக இருந்த திமுகவினர், இப்போது திடீரென மொழிப்போர் காவலர்கள் போல் வேடம் போடுவது ஏன்? தாங்களே இந்தியைத் திணித்துவிட்டு, இப்போது அதனை ஒரு பூதாகரமான பிரச்சனையாக மாற்றி அரசியல் குளிர்காய நினைப்பது திமுகவின் அப்பட்டமான பித்தலாட்டம்!

தற்போதைய நிர்வாகம், கிடங்கில் உள்ள தேவையின் அடிப்படையில் மட்டுமே கவர்களைக் கொள்முதல் செய்ததே தவிர, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அந்த வடிவமைப்பிலோ அல்லது மொழியிலோ எந்த மாற்றமும் செய்யவில்லை. தாங்கள் செய்த துரோகத்தை மறைக்க, எங்கள் மீது அபாண்டமாகப் பழிபோடும் திமுகவின் கேவலமான அரசியல் தந்திரம் இது!

இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு வந்தவுடனேயே, கரூர் மற்றும் கோவை ஆகிய இரு இடங்களிலும் அந்த மாத்திரை உறைகளின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. கரூரில் மீண்டும் பழைய நடைமுறைப்படி, மத்திய சிறையிலிருந்து கவர்கள் பெறப்பட்டு தமிழ் மொழியில் மட்டுமே விவரங்கள் முத்திரையிடப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கும் பணி உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் மேற்கொண்டு நோயாளிகளின் பயன்பாட்டிற்காக 'தமிழ் மற்றும் ஆங்கிலம்' ஆகிய இரு மொழிகள் மட்டுமே கொண்ட மாத்திரை கவர்கள் உடனடியாகத் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேரறிஞர் அண்ணா வழியில் இருமொழிக் கொள்கையை பெயரளவில் இல்லாமல், தன் உயிர் மூச்சாகக் கடைபிடித்து வரும் ஒரே இயக்கம் தமிழக வெற்றிக் கழகம். இதில் எப்போதும் சமரசம் செய்ய மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks