"Pendrive - ல் கிடைத்த வீடியோ"

சென்னை பெருநகர காவல் துறையின், விபச்சார தடுப்பு பிரிவில் ஏற்கனவே பெறப்பட்ட Pendrive-ல் கிடைத்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் , சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பிரபல கிரானைட் தொழிலதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி , மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

மேலும் இது தொடர்பான மற்றொரு வீடியோவை வைத்திருந்தும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காத கணேசன் என்பவரும் கடந்த இரண்டு வாரம் முன்பு கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் புலன் விசாரணையில் ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணியின் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு சிறுமிகளை அழைத்து வந்து உடந்தையாக இருந்த ஓட்டுநர்கள் லாசர், பார்த்திபன் மற்றும் பாபு ஆகியோர் கடந்த 5 ம் தேதி அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

"ஜெம் வீரமணி வீட்டில் சோதனை"

மேற்படி புலன் விசாரணையில் வீரமணி மற்றும் சாந்தி ஆகியோர் 8 - ம் தேதி அன்று ஒரு மேலும் வழக்கில் சம்பிரதாய கைது செய்யப்பட்டு சென்னை , புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கனவே ஜெம் வீரமணி மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேலும் ஒரு வழக்கு ஆறாவதாக பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளின் வாக்கு மூலத்தின் மீது ஒரு வழக்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இதுவரை 10 சிறுமிகளின் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு புலன் விசாரணை நடை பெற்று வருகிறது.
மேலும் இச்சம்பவங்களில் குற்ற நிகழ்வு இடமான ஜெம் வீரமணி வீட்டில் சோதனை நடைபெற்றது.

Source: Read Full Article