தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து சென்னை மற்றும் டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறகர் பகுதியில் அவ்வப்போது கனமழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

புயலாக உருவாக வாய்ப்பு

இதனிடையே வங்கக் கடலில் அக்டோபர் 23-ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதால், அது புயலாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது புயலாக மாறும் பட்சத்தில் முரசு என பெயர் சூட்டப்படலாம் என கூறப்படுகிறது.

கனமழை எச்சரிக்கை

இந்நிலையில் இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

அதேபோல் திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்நிலையில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு முதல் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article