பணி முடிந்து வீடு திரும்பிய நர்ஸ் பாலியல் பலாத்காரம் செய்து கொலை - நடந்தது என்ன ?

பணி முடிந்து வீடு திரும்பிய நர்ஸ் பாலியல் பலாத்காரம் செய்து கொலை - நடந்தது என்ன ?
News Image

"காணாமல் போன நர்ஸ்"

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த ஒருவர் , ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

நர்சிங் படித்துள்ள இவர், பெருந்துறை அருகே பல்லகவுண்டன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 3 - ம் தேதி நர்ஸாக பணியில் சேர்ந்துள்ளார். கணவன், மனைவி இருவரும் பல்லகவுண்டன்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். வழக்கம் போல் கடந்த 14 - ம் தேதி காலை பணிக்கு சென்ற நர்ஸ், அன்று இரவு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்காததால் கணவர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து அந்த நர்சை தேடி வந்தனர்.

"உடலை வாங்க மாட்டோம்"

பல்லகவுண்டன்பாளையம் அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் சாலையோர மரத்தடியில் இளம்பெண்ணின் சடலம் நிர்வாணமாக அழுகிய நிலையில் கிடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் , போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டது கடந்த 14 - ம் தேதி காணாமல் போன நர்ஸ் தான் என தெரிய வந்தது. இதுகுறித்து விஜயமங்கலம் அருகே கைக்கோளம்பாளையத்தில் உள்ள நர்சின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து உடலை பார்த்து உறுதி செய்து கதறி அழுதனர். இது குறித்து நர்சின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறுகையில் , ''ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பிறகு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் , நர்சை பற்றி தவறாக விசாரித்தனர்.

"பாலியல் பலாத்காரம் செய்து கொலை"

போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்க முடியும். நர்சை கொலை செய்த நபரை கண்டுபிடிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர். கடந்த 14ம் தேதி வேலைக்கு சென்ற நர்ஸ் , மருத்துவமனையில் இருந்து அன்று இரவு 7 மணிக்கு மேல் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பியதாகவும் , வழியில் பழக்கடை ஒன்றுக்கு சென்றதாகவும் அதன் பிறகே காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், நர்ஸ் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், நர்ஸ் அணிந்திருந்த 3 பவுனில் நகை காணவில்லை. எனவே, நர்சை பலாத்காரம் செய்து கொலை செய்தவர் நகையையும் கொள்ளையடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks