"நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் - அங்கன்வாடி திறப்பு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை அம்மன் கோயில் தெரு, சிவாஜி நகர் பகுதியில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை அமைச்சர் மரிய வில்சன் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து , அப்பகுதியில் நடைபெற்று வரும் ஆகாயத் தாமரை அகற்றும் பணிகளையும் அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் வடக்கு வட்டார துணை ஆணையர் ஸ்வேதா சுமன், பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர் விமலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மரிய வில்சன் ;

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்துக் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு , பதிலளித்த அவர்,

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம். தேர்தலில் போட்டியிடலாம் அது அவரவர் விருப்பம். இருப்பினும், நடிகர் தனுஷின் அரசியல் வருகை தமிழக அரசியலில் தற்போதைய தலைமைக்குப் போட்டியாக அமையாது. நடிகர் ரஜினிகாந்தின் மருமகனான தனுஷ் அரசியலுக்கு வந்தாலும் , அவரால் தற்போதைய அரசியல் தலைமைக்குச் சமமாக வர முடியாது. 1996-ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவாகத் நான் இருந்தேன். ஆனால் அன்றைய அரசியல் சூழ்நிலைக்கும் தற்போதைய சூழ்நிலைக்கும் வேறுபாடு இருக்கிறது.

"அரசியல் கணக்கீடுகள் வெற்றியை தராது"

கடந்த தேர்தல்களில் பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட போதும், மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர். இது போன்ற அரசியல் கணக்கீடுகள் வெற்றியைத் தராது. நடிகர் தனுஷ் தனக்குத் தெரிந்தவர். அவர் அரசியலுக்கு வருவது குறித்த முடிவு சரியானதா என்பது எதிர் காலத்தில் தான் தெரிய வரும்.

இரு கட்சிகளின் அரசியல் அணுகு முறையிலும் , அவதூறாகப் பேசும் போக்கு இருக்கிறது. அரசியல் விவாதங்களில் இத்தகைய பேச்சுகள் தேவையா ? அரசியலில் யார் பிரசாரம் செய்கிறார்கள், யாருக்கு மக்களின் ஆதரவு கிடைக்கிறது என்பதையெல்லாம் மக்கள் தேர்தல் மூலம் தீர்மானிப்பார்கள் என கூறினார்.

Source: Read Full Article