வழக்கறிஞர்கள் மாநாடு- நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் எழுச்சி மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் கரூர்.மாரப்பன், கவுரவ தலைவராக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்க தலைவரும், மூத்த வழக்கறிஞருமான எஸ்.பிரபாகரன் பொதுச்செயலாளராக அய்யாவு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம்

இதனையடுத்து மாநாட்டில் பேசிய கூட்டமைப்பின் கவுரவ தலைவரும், மூத்த வழக்கறிஞருமான எஸ். பிரபாகரன், தமிழக சட்டமன்ற கூட்டத்தில் வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும், வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதியை உயர்த்துவது தொடர்பான தீர்மானம், அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழக்கறிஞர்களின் இணைப்பது தொடர்பான தீர்மானத்தை வலியுறுத்தினார். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர் , வழக்கறிஞர்கள் கஷ்டங்களை நன்றாக அறிவேன் என குறிப்பிட்ட சட்டத்துறை அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமார், முதல்வர் ஒப்புதலோடு வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

விரைவில் போக்சோ நீதிமன்றம்

ஜனவரி மாதத்திற்குள் போக்சோ மற்றும் போதை பொருட்கள் தடுப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கான நீதி சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும் என தெரிவித்த அமைச்சர் நிர்மல்குமார், கீழமை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்குக்கான அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதி உயர்த்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

”வழக்கறிஞர் சேமநல நிதி 25 லட்சம்”

முன்னதாக இந்த மாநாட்டில் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், வழக்கறிஞர்களின் சேமநல நிதியை பத்து லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், வழக்கறிஞர் குடும்கத்திற்கான விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தைத் ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Source: Read Full Article