"காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் "

சென்னை வடபழனியில் உள்ள கெங்கையம்மன் கோவில் தெருவில் நடைபெறும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவம் , மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு கொசு ஒழிப்பு பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜ் ;

டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கக் கூடிய பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பணியாளர்களின் பணி வீடு வீடாகச் சென்று தண்ணீர் தேங்காமல் இருப்பதை பார்வையிடுவதும் அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள் அதற்கு பொதுமக்களும் அவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

காய்ச்சல் கண்டறியும் சோதனைகள்

பெரு நிறுவனங்கள் கட்டுமான நிறுவனங்கள் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கும் படி இருந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். முதல் தடவை பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும் அடுத்த முறை கூடுதலாகவும் வசூலிக்கப்படும்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் 7.5 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் காய்ச்சல் கண்டறியும் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

"டெங்கு காய்ச்சல் பரவல் குறைந்துள்ளது"

சராசரியாக மாநிலம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு வார்டுகளுக்கு ஒரு சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது.

இன்று கோடம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 50 நபர்களுக்கு சோதிக்கப்பட்டு , அவரின் ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் உரிய சிகிச்சை வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் ஜனவரி 1 முதல் அக்டோபர் ஏழு வரை 21,655 டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது அவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. பருவமழை தொடங்க உள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணியை மேற்கொள்வதற்கு 3,700 கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன..

கொசு ஒழிப்பு பணி உள்ளிட்ட காய்ச்சல் சிறப்பு முகம் நிகழ்ச்சிகளிலும் மேயர் கலந்து கொள்வதில்லை என்ற கேள்விக்கு ;

அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதே பொது மக்களின் எண்ணமாக உள்ளது. இதில் அரசியல் சார்பும் அரசியல் காரணங்களுக்காக செயல்படக் கூடாது.

அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் முறையான அழைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது , மேயர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதை அவரிடம் கேளுங்கள்.

Source: Read Full Article